Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Gavitha / 2015 மார்ச் 26 , பி.ப. 01:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
-மாணிக்கப்போடி சசிகுமார்
யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட முல்லைத்தீவு மாவட்டத்தின் இளைஞர் யுவதிகளின் நலனைக் கருத்தில் கொண்டு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் அமைக்கப்பட்ட இளைஞர் மத்திய நிலையம் புதன்கிழமை (25) மாலை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டது.
தேசிய இளைஞர் சேவைகள் மன்றம் மற்றும் இலங்கைக்கான சிறுவர் நிதியம் என்பன இணைந்து, அவுஸ்ரேலியா சிறுவர் நிதியத்தின் அனுசரணையுடன் 13 இலட்சம் ரூபாய் செலவில் புதுக்குடியிருப்பு இரணைப்பாலம் கிராமத்தில் நிர்மாணிக்கப்பட்ட இளைஞர் மத்திய நிலையமே திறந்து வைக்கப்பட்டது.
இளைஞர் கழக உப தலைவர் எஸ்.விமல் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், சிறுவர் நிதியத்தின் தேசிய திட்டப்பணிப்பாளர் ஜெகநாதன் மற்றும் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் வடமாகாணப்பணிப்பாளர் சரத் சந்திரபால ஆகியோர் கலந்து கொண்டு திறந்துவைத்தனர்.
இந்நிகழ்வில் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் தலைமையக இளைஞர் அபிவிருத்திப் பிரிவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி வசந்த கருணரத்தின, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் சேவை அதிகாரிகளான திருமதி கு.சறோஜா, மா.சசிகுமார் மற்றும் கிளிநொச்சி மாவட்ட இளைஞர் சேவை அதிகாரி நா.குகேந்திரா, சிறுவர் நிதியத்தின் நிகழ்ச்சித்திட்ட முகாமையாளர்களான எஸ்.ஜனார்த்தனன், திருமதி ஊர்மிளா, திருமதி தயாளினி, திருமதி செல்வி, இளைஞர் சேவை அதிகாரி கே.சிந்துஜன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago