Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 மார்ச் 27 , மு.ப. 07:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பில் அறிவுரை வழங்கும் விசேட நிகழ்ச்சித்திட்டமொன்று இன்று வெள்ளிக்கிழமை (27) காலை, மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் மன்னார் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திருமதி நந்தினி ஸ்ரான்லி டீ மேல் தலைமையில் இடம்பெற்றது.
மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சின் தேசிய ஓசோன் பிரிவினால் ஒழுங்குசெய்யப்பட்ட இந்த நிகழ்ச்சித்திட்டத்தில் மன்னார் மாவட்ட வன அலுவலகர் எம்.ஏ.கே.ஜயக்கொடி, சுற்றாடல் அமைச்சின் புதுப்பித்தல் சக்தி பிரிவு இயக்குநர் ஜனக்க குணரத்ன, அரச மற்றும் தனியார் நிறுனங்களின் பிரதிநிதிகள் மற்றும் திணைக்களத் தலைவர்கள் என பலர் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ஓசோன் மண்டலத்தில் ஏற்பட்டுள்ள பாதிப்பினால் சூழலில் ஏற்படக்கூடிய பாதிப்புக்கள் தொடர்பிலும் அவற்றை நிவர்த்தி செய்யக்கூடிய வழிமுறைகள் குறித்தும் விரிவாக விளக்கமளிக்கப்பட்டது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
20 minute ago
23 minute ago
30 minute ago