Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Kanagaraj / 2015 மார்ச் 28 , மு.ப. 11:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
மடு பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள பண்டிவிரிச்சான் மேற்கு மாதர்,கிராம அபிவிருத்திச்சங்க பிரதி நிதிகளுக்கும் வடமாகாண அமைச்சர் பா.டெனிஸ்வரனுக்கும் இடையில் புதன் கிழமை, மடு பிரதேச செயலகத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
குறித்த சந்திப்பில் வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்கள பணிப்பாளர் ஜே.ஜே.சி.பெலிசியன் , மடு பிரதேச செயலாளர் .எப்.சி.சத்தியசோதி,மடு பிரதேச செயலக உதவி திட்டமிடல் பணிப்பாளர் ரொகான் குரூஸ் , கிராம அலுவலகர் லுமாசிறி மற்றும் மடு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த கலந்துரையாடலின் போது பண்டிவிருச்சான் மேற்கு பகுதியில் உள்ள குறைபாடுகள் தொடர்பிலும் மேற்கொள்ளப்பட வேண்டிய அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பிலும் கலந்துiராயாடப்பட்டது.
இதன் போது அக்டெட் நிறுவனத்தால் வடக்கு மாகாணத்தில் உள்ள சுமார் 240 மாதர் கிராம அபிவிருத்தி சங்கங்களுடன் போட்டியிட்டு 7 ஆவது இடத்தை பெற்று ஐரோப்பிய ஜூனியனின் நிதி உதவித் திட்டமான சிறு நன்கொடைத் திட்டமான சுமார் 14 இலட்சம் பெற்ற மாதர் கிராம அபிவிருத்தி சங்கத்துக்கு அமைச்சர் பாராட்டுக்களையும் தெரிவித்ததோடு இனிவரும் காலங்களிலும் வினைத்திறன் மிக்க சங்கமாக விளங்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
அத்துடன், கிராம அபிவிருத்தி சங்கத்தில் உள்ள பிரச்சினைகள் தொடர்பாகவும் கலந்துரையாடியதோடு கிராம அபிவிருத்தி சங்கத்துக்கான பொதுக் கூட்டத்தினையும் நடத்துமாறும் கேட்டுக்கொண்டார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
2 hours ago