2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மாந்தை மேற்கு வீதிகள் புனரமைப்பு

Menaka Mookandi   / 2015 மார்ச் 29 , மு.ப. 08:31 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இரண்டு முக்கிய பிரதான வீதிகளை புனரமைக்கும் பணிகளை வடமாகாண வீதி, போக்குவரத்து அமைச்சர் பா.டெனிஸ்வரன் நேற்று (28) சனிக்கிழமை வைபவரீதியாக ஆரம்பித்து வைத்தார்.

மாந்தை மேற்கு பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட கருங்கண்டல் - காத்தான்குளம் பிரதான வீதி மற்றும் உயிலங்குளம் ஊடாக அடம்பன் செல்லும் வீதி ஆகியவற்றின் புனரமைப்பு பணிகளே ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.

வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சரின் பணிப்புரைக்கு அமைவாக வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் சுமார் 04 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டின் கீழ் குறித்த வீதிகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில், மாந்தை மேற்கு பங்குத்தந்தை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், வடக்கு மாகாண மீன்பிடி, போக்குவரத்து, வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன், மாந்தை மேற்கு பிரதேச சபையின் உப தலைவர் எஸ்.சௌந்தர நாயகம், வீதி அபிவிருத்தி திணைக்களத்தின் மன்னார் - வவுனியா பிரதம பொறியியலாளர் ரகுநாதன் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .