Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2015 மார்ச் 30 , மு.ப. 11:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
-வி.தபேந்திரன்
வவுனியாவை தலைமை அலுவலமாகக் கொண்டு இயங்கும் ஓகன் நிறுவனத்தால் கிளிநொச்சியில் நடத்தப்பட்ட 6 மாத கால வீட்டு மின் இணைப்பு பயிற்சி நெறியைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும் நிகழ்வு, கிளிநொச்சி சோலைவனம் விருந்தினர் விடுதியில் திங்கட்கிழமை(30) நடைபெற்றது.
ஓகன் நிறுவன தலைவர் வி.சுப்பிரமணியம் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் முதன்மை விருந்தினராக கிளிநொச்சி மாவட்ட செயலக திட்டமிடல் பணிப்பாளர் ச.மோகனபவன் கலந்து கொண்டார்.
சுவிஸ் நாட்டைச் சேர்ந்த எஸ்.டி.ஏ நிறுவனத்தின் நன்கொடையில் 12 இலட்சம் ரூபாய் செலவில் நடத்தப்பட்ட இந்த பயற்சி நெறியில் 16 பேர் பயிற்சியை நிறைவு செய்து சான்றிதழைப் பெற்றுக்கொண்டனர். இதில் 5 பேர் மாற்றுத்திறனாளிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
36 minute ago
2 hours ago
3 hours ago