2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

மதுபோதையில் வாகனம் செலுத்திய இருவர் கைது

Suganthini Ratnam   / 2015 ஏப்ரல் 08 , மு.ப. 05:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ரஸீன் ரஸ்மின்

முல்லைத்தீவு, முள்ளியவளை பிரதேசத்தில் மதுபோதையில் வாகனங்களை செலுத்திய குற்றச்சாட்டின் பேரில் நேற்றுமுன்தினம்  திங்கட்கிழமை இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்கள் என்று  முள்ளியவளை பொலிஸ் நிலைய போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி கே.ஏ.ஜெயதிஸ்ஸ நேற்று செவ்வாய்க்கிழமை தெரிவித்தார்.

முல்லைத்தீவு- கிளிநொச்சிக்கிடையில் சேவையில் ஈடுபடும் தனியார் பஸ் வண்டி மற்றும் உழவு இயந்திரத்தை  செலுத்தி சென்ற இரு சாரதிகளே  கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

தனது நாளாந்த சேவையை முடித்துக்கொண்டமையால், அந்த பஸ்ஸில் பயணிகள் இருக்கவில்லை.  சாரதி மாத்திரமே கடுமையான மதுபோதையில் பஸ்ஸை செலுத்திச் சென்ற குற்றச்சாட்டில் பஸ் வண்டிச் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் பொலிஸார் கூறினர்.

இதேவேளை,  தண்ணீரூற்று பிரதேசத்தில்  மதுபோதையில் உழவு இயந்திரத்தை செலுத்திச் சென்றார் என்ற குற்றச்சாட்டின் பேரில் மற்றையவர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்றும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .