Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 09 , மு.ப. 09:27 - 0 - {{hitsCtrl.values.hits}}
2015ஆம் ஆண்டு, ஜனவரி ஆரம்பத்திலிருந்து ஏப்ரல் 07ஆம் திகதி வரையிலான காலப்பகுதியில் சட்விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட சுமார் 5,500 வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சில் புதன்கிழமை (08) நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர்மட்ட குழுவினருடன் இடம்பெற்ற சந்திப்பொன்றிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
விலைமாற்றுதல், காலாவதியான பொருட்களின் திகதியை மாற்றி விற்பனை உள்ளிட்ட பல்வேறு சட்டவிரோத நடவடிக்கைகளில் இருந்து விலகுமாறு வர்த்தகர்களுக்கு நாம் கடுமையாக எச்சரிக்கின்றோம்.
இதேவேளை வருகின்ற புதுவருடத்தை முன்னிட்டு நுகர்வோர் அசௌகரியங்களுக்கு உள்ளாக்கப்படுவதில் இருந்து தவிர்க்கப்படுவதற்கு பாதுகாப்பு அதிகார சபையினர் தீவிர செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நுகர்வோருக்கு சிறந்ததெரு வணிக அனுபவத்தை புதுவருட காலத்தில் பெற்றுக்கொடுப்பதில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தலைமையிலான புதிய அரசாங்கம் அதிக அக்கறை செலுத்தி வருகிறது. நாடு பூராகவுள்ள அனைத்து களஞ்சியசாலைகளுக்கும் தேவையான பொருட்களை உரிய நேரத்தில் வழங்குவதற்கு ஏற்கெனவே நடவடிக்கை எடுக்கப்பட்டுவிட்டது.
அத்துடன், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான புதிய அரசாங்கத்தின் விருப்பத்துக்கு ஏற்ப, நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்கவினால் சமர்ப்பிக்கப்பட்ட 2015ஆம் ஆண்டுக்கான இடைக்கால வரவு - செலவுத்திட்டத்தினூடாக சீனி, கோதுமை மா மற்றும் பாண் உள்ளிட்ட 13 அத்தியவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளமை யாவரும் அறிந்த விடயமே. நுகர்வோர் அதிகாரசபையானது, நுகர்வோர் நலன்களை பாதுகாக்கும் ஓர் உயர் அரச அமைப்பு என அமைச்சர் கூறினார்.
கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சின் அதிகாரிகள், நுகர்வோர் பாதுகாப்பு அதிகார சபையின் உயர்மட்ட குழுவினர், சதொச நிறுவன அதிகாரிகள் என பலர் இதில் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
6 hours ago