2025 ஜூலை 10, வியாழக்கிழமை

பல்வேறு துறைகளில் பணியாற்றும் பெண்கள் கௌரவிப்பு

George   / 2015 ஏப்ரல் 09 , பி.ப. 02:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் பல்வேறு துறைகளில் சிறப்பாக பணியாற்றிவரும் பெண்களை கௌரவித்தலும் பன்னாட்டு மகளிர் தின நிகழ்வும் புதுக்குடியிருப்புப் பிரதேச செயலகத்தில் வியாழக்கிழமை(09) நடைபெற்றது.

புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தின் உதவித்திட்டமிடல் பணிப்பாளர் இராசையா திலீபன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக முல்லைத்தீவு மக்கள் வங்கியின் முகாமையாளர் திருமதி.ஆஞ்சனா விக்ரர் ஜெயசிங்கம் கலந்துகொண்டார்.

கெயார் நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்ற இந்நிகழ்வில், உணவு உற்பத்தி, மட்பாண்டம், தோல் உற்பத்தி பொருட்கள், தையல் எனப் பல்வேறு துறைகளில் சிறப்பாற்றி வரும் பெண்களும் மதிப்பளிக்கப்பட்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .