Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 10 , மு.ப. 07:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரொமேஸ் மதுசங்க, நவரத்தினம் கபில்நாத்
வவுனியா, நெலுக்குளம் சாம்பல்தோட்டம் பகுதியில் 10 வயது மாணவனொருவர், கூரிய ஆயுதமொன்றினால் கழுத்து வெட்டப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில், அச்சிறுவனின் சடலம், வீட்டின் பின்புறத்தில் இருந்து நேற்று வியாழக்கிழமை இரவு மீட்கப்பட்டது என வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.
சந்திரசேகரன் சஞ்சய் என்ற சிறுவனே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளான். இச்சிறுவன், இம்முறை புலமைப்பரிசில் பரீட்சைக்கு தோற்றவிருந்தான் என்று பொலிஸார் கூறினர்.
பாசாலையில் வகுப்புகளை நிறைவு செய்து வந்த பின்னர் தாயார் உணவை வழங்கி விட்டு அருகில் உள்ள வீட்டுக்குச் சென்ற சமயமே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாக அயலவர்கள் தெரிவித்திருந்தனர்.
இதேவேளை, வீட்டின் பின்புறமிருந்த சடலத்தை உறவினர்கள் தூக்கிவந்து வீட்டுக்குள் வைத்திருந்தனர் என பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
1 hours ago
2 hours ago