2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

நற்கருணை நாதர் ஆலய திறப்பு விழா 16 ஆம் திகதி நடைபெறும்

Kanagaraj   / 2015 ஏப்ரல் 11 , மு.ப. 08:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் அமைக்கப்பட்டு வரும் நற்கருணை நாதர் ஆலய திறப்பு விழா மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப்பு ஆண்டகை   அவர்களின் 75 ஆவது பிறந்த தினமாகிய எதிர்வரும் 16 ஆம் திகதி, வியாழக்கிழமை வைபவ ரீதியாக திறந்து வைக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 16 ஆம் திகதி வியாழக்கிழமை காலை 07 மணிக்கு இறை பிரசன்னத்தில் வடக்கு,கிழக்கு மறைமாவட்ட ஆயர்கள் ஒன்றினைந்து  அபிஷேகம் செய்து கூட்டுத்திருப்பலி திருப்பலி ஒப்புக்கொடுக்கப்பட உள்ளது.

மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை தலைமையில் யாழ் மறைமாவட்ட ஆயர் தோமஸ் சவுந்தர நாயகம்,திருகோணமலை மறைமாவட்ட ஆயர் கிங்ஸ்லி சுவாம்பிள்ளை,மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் ஆண்டகை ஆகியோர் இணைந்து ஆலையத்தை திறந்து வைத்து திருப்பலியினை ஒப்புக்கொடுக்கவுள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .