Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
A.P.Mathan / 2015 ஏப்ரல் 13 , மு.ப. 07:21 - 0 - {{hitsCtrl.values.hits}}
வவுனியா மாவட்ட மத்திய பஸ் நிலையம் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது. அதன் திறப்புவிழா முடிந்ததன் பின்னர் விரைவில் முல்லை மாவட்டத்துக்கு விஜயம் செய்து, புதிய மத்திய பஸ்தரிப்பு நிலையத்துக்கான அடிக்கல் நாட்டுவதற்கான சகல ஏற்பாடுகளும் செய்வதுடன் நின்றுவிடாமல் அதனைத் தொடர்ந்து கட்டட வேலைகள் துரித கதியில் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் தான் எடுப்பதாகவும் வவுனியா தொடக்கம் கே.கே.எஸ் வரையான புகையிரதப் பாதையின் பாதுகாப்புக் கடவை அமைப்பதற்கான சகல வசதிகளையும் தான் நிச்சயமாக பொலிஸ்மா அதிபருடன் பேசி அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் எனவும் உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஆர்.எம்.றஞ்சித் மத்தும பண்டார, உறுதியளித்துள்ளார்.
உள்நாட்டு போக்குவரத்து அமைச்சர் ஆர்.எம்.றஞ்சித் மத்தும பண்டாரவுக்கும் முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்ட இளைஞர் பேரவை உறுப்பினர்களுக்கும் இடையில் கடந்தவாரம், கொழும்பிலுள்ள அமைச்சு அலுவலகக் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அமைச்சர் மேற்படி கூறினார்.
முற்போக்கு தமிழ் தேசிய கட்சியின் செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந்தினால் முல்லைத்தீவு மக்கள் எதிர்நோக்கும் போக்குவரத்துப் பிரச்சினைகள், முல்லை மாவட்ட மக்களுக்கு இதுவரை மத்திய பஸ் தரிப்பு நிலையம் இல்லை என்பன போன்ற பிரச்சினைகளை அமைச்சரின் கவனத்துக்கு எடுத்துக் கூறப்பட்டதுடன், வவுனியா தொடக்கம் கே.கே.எஸ் வரையான புகையிரதப் பாதையில் பாதுகாப்புக் கடவை அற்ற நிலைமை காரணமாக கடந்த பல மாதங்களாக பாடசாலை மாணவர், முதியோர் உள்ளடங்கலாக பலர் புகையிரத விபத்துக்களால் உயிர் இழந்து வருகின்றனர் என்பதையும் சுட்டிக்காட்டினார்.
இதற்குப் பதிலளித்த அமைச்சர் ஆர்.எம்.மத்தும பண்டார, வவுனியா மாவட்ட மத்திய பஸ் நிலையம் புதிதாகக் கட்டப்பட்டு வருகின்றது. அதன் திறப்புவிழா முடிந்ததன் பின்னர் விரைவில் முல்லை மாவட்டத்துக்கு விஜயம் செய்து, முல்லை மாட்டத்துக்குப் புதிய மத்திய பஸ்தரிப்பு நிலையம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்ட சகல ஏற்பாடுகளும் செய்வதுடன் நின்றுவிடாமல் அதனைத் தொடர்ந்து கட்டட வேலைகள் துரித கதியில் நடைபெறுவதற்கு உரிய அனைத்து ஏற்பாடுகளையும் தான் எடுப்பதாகவும் வவுனியா தொடக்கம் கே.கே.எஸ் வரையான புகையிரதப் பாதையின் பாதுகாப்புக் கடவை அமைப்பதற்கான சகல வசதிகளையும் தான் நிச்சயமாக பொலிஸ்மா அதிபருடன் பேசி அதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என உறுதி மொழி அளித்தார்.
இச்சந்திப்பில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆர்.எம்.றஞ்சித் மத்தும பண்டார, அமைச்சின் செயலாளர், இணைப்புச் செயலாளர், முற்போக்கு தமிழ் தேசிய கட்சி சார்பாக செயலாளர் நாயகம் எஸ்.விஜயகாந்த், முல்லை மாவட்ட அமைப்பாளர் க.டக்ளஸ், யாழ். மாவட்ட அமைப்பாளர் ஜே.ராஜ்குமார், கிளிநொச்சி - முல்லைத்தீவு இளைஞர் பேரவை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
2 hours ago
3 hours ago