Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Princiya Dixci / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 04:54 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நவரத்தினம் கபில்நாத்
வலிகாமம் வடக்கு, வீமன்காமத்தில் இராணுவம் விடுவிப்பதாக தெரிவித்த பகுதிகளில் புதிதாக கட்டடங்களை இராணுவம் கட்டி வருவதனை உடன் தடுத்து நிறுத்துமாறு கோரி வீமன்காமம் அம்மன் கோவிலடி மக்கள், வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வன்னி நாடாளுமன்ற உறுப்பின் சிவசக்தி ஆனந்தனை, திங்கட்கிழமை (13) அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே மக்கள் இக்கோரிக்கையை விடுத்தனர்.
இந்நிலையில் மக்கள் கையளித்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
வலி. வடக்கில் 25 கிராம சேவகர் பிரிவுகளின் சில கிராம சேவகர் பிரிவுகள் விடுவிக்கப்பட்டமை மகிழ்ச்சியளிக்கின்றது. எனினும், நாம் 25 வருடங்களாக எமது கிராமத்துக்கு திரும்பிச் செல்லலாம் என்ற ஆவலுடன் 11.04.2015 திகதி வீமன்காமம் வடக்கு (காங்கேசன் துறை தெற்கு) துஃ236 கிராம சேவகர் பிரிவுக்;கு சென்ற போது வீமன்காமம் வடக்கு வெங்காயச்சங்கத்தின் பின் பகுதிக்கு செல்வதற்கோ மீள்குடியேறவோ இராணுவம் அனுமதி வழங்காமை எமக்கு பெரும் ஏமாற்றத்தையும் மனவேதனையையும் ஏற்படுத்தியுள்ளது.
இப்பகுதியில் மக்கள் குடியிருப்புகள்; மீது இராணுவ நிரந்தர முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன் புதிதாகவும் அத்திவாரம் இட்டு இராணுவ கட்டடங்கள் கட்டப்படுகின்றன. ஆனால், இப்பகுதி 75 மேற்பட்ட குடும்பங்களைக் கொண்ட ஒரு பாரம்பரிய குடியிருப்பு பகுதியாகும். இங்கு வாழ்ந்த மக்கள் இன்று இவ்விடத்தை விட்டு வேறு மாவட்டங்களில் இடம்பெயர்ந்து வாழ்கின்றோம்.
எமது இப்பிரதேசத்திலுள்ள பொது இடங்கள்
ஆலயங்கள்
குருந்தடி இராஜ இராஜேஸ்வரி அம்மன்
கண்ணகி அம்மன் கோவில்
புளியடி வைரவர்
மைலப்பை வைரவர் கோவில்
சுடுகாட்டு வைரவர்
கூத்தியவத்தை பிள்ளையார்
ஏனையவை
வாலிபர் முன்னேற்றகழக வாசிக சாலை
வீமன்காமம் வடக்கு முன்பள்ளி (வெங்காயச்சங்க முன்பள்ளி – தற்போது இராணுவ பயிற்சி மண்டபமாக பயன்படுத்தப்படுகின்றது)
வெங்காயச்சங்கம்
கூட்டுறவுச்சங்கம்
இந்துமயானம்
எமது இக்குடியிருப்பு பகுதியிலேயே வீமன்காமம் குருந்தடி இராஜ இராஜேஸ்வரி அம்மன் கோவில் உள்ளது. இவை அனைத்தையும் கொண்ட 75 குடும்பங்களுக்கு மேற்பட்ட குடியிருப்பு பகுதியில் இராணுவ முகாம் அமைக்கப்பட்டு வருகின்றது.
முகாம் அமைக்கும் நடவடிக்கையை உடன் நிறுத்த ஆவண செய்து, எமது சொந்த கிராம மண்ணையும் அதனுடன் சூழ உள்ள குடியிருப்பு மற்றும் சூழல் பகுதியையும் விடுவித்து மக்கள் மீள்குடியேற ஏற்ற நடவடிக்கைகளை ஏற்படுத்தி தருமாறும் மிகத்தாழ்மையுடன் வேண்டி நிற்கின்றோம் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
13 minute ago
20 minute ago