Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 10, வியாழக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 05:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நடராசா கிருஸ்ணகுமார்
முல்லைத்தீவு, ஒட்டுசுட்டான் ஆறுமுகம் வித்தியாலயத்துக்கு சொந்தமான காணியில், யுத்தத்தின்போது கைவிடப்பட்ட வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளமையால் பாடசாலையின் அபிவிருத்திப் பணிகளை முன்னெடுக்க முடியாமல் இருப்பதாக பாடசாலை நிர்வாகம் தெரிவித்தது.
1,000 பாடசாலைகள் அபிவிருத்தி திட்டத்தின் கீழ் ஒட்டுசுட்டான் மகா வித்தியாலயம் தெரிவு செய்யப்பட்டதை அடுத்து அதன் ஆரம்பப்பிரிவு, ஆறுமுகம் வித்தியாலயம் என தனிப் பாடசாலையாக உருவானது.
205க்கும் மேற்பட்ட மாணவர்கள் இந்தப் பாடசாலையில் கல்வி கற்கின்றனர். கைவிடப்பட்ட வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளமையால், புதிய கட்டடங்களை நிர்மாணிக்க முடியாதுள்ளது. கைவிடப்பட்ட வாகனங்களில் குடியுள்ள பாம்புகள், பாடசாலைக்குள் நுழைகின்றன. இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் அச்சத்துடன் இருப்பதாக பாடசாலை நிர்வாகம் கூறியது.
இது தொடர்பில், துணுக்காய் வலய கல்விப் பணிப்பாளர் திருமதி லூட்ஸ் மாலினி வெனிட்டனிடம் தொடர்புகொண்டு கேட்டபோது, 'பாடசாலையில் கைவிடப்பட்ட வாகனங்கள் குவிக்கப்பட்டுள்ளமை தொடர்பாக முல்லைத்தீவு மாவட்டச் செயலாளர், இராணுவத்தினர் ஆகியோருக்கு கடிதங்கள் மூலம் கடந்த இரு ஆண்டுகளாக தெரியப்படுத்தியுள்ளோம். இதுவரையில் கைவிடப்பட்ட வாகனங்கள் அகற்றப்படவில்லை' என்றார்.
'வாகனங்கள் அகற்றப்படாமையால் பாடசாலையை அபிவிருத்தி செய்ய முடியாதுள்ளது. பாடசாலைக்கு புதிய கட்டடங்கள் நிர்மாணிப்பதற்கு அனுமதி கிடைத்தும், அவற்றை நிர்மாணிக்க முடியாத நிலை காணப்படுகின்றது' என்று அவர் மேலும் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 minute ago
2 hours ago
2 hours ago