2025 ஜூலை 10, வியாழக்கிழமை

விஞ்ஞான ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு மகஜர்

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, முரசுமோட்டை முருகானந்தா கல்லூரியில் நிலவி வரும் விஞ்ஞான பாட ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து தருமாறு கிளிநொச்சி வலயக் கல்விப் பணிப்பாளர் அ.முருகவேலிடம் மகஜர் கையளித்துள்ளதாக பாடசாலை நிர்வாகம் வியாழக்கிழமை (16) தெரிவித்தது.

இந்தப் பாடசாலையில் தரம் 6 முதல் 11 வரையான வகுப்புக்களில் கற்பித்தல் செயற்பாடுகள் மேற்கொள்ளப்படுகின்றன. 3 விஞ்ஞான பாட ஆசிரியர்கள் தேவையான நிலையில் 1 விஞ்ஞான பாட ஆசிரியரே இங்கு கல்வி கற்பிக்கின்றார்.

இது தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் மகஜர் கையளித்து கோரிக்கை முன்வைக்கப்பட்ட போதும் இதுவரையில் அது நிவர்த்தி செய்யப்படவில்லை என நிர்வாகம் தெரிவித்தது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .