2025 ஜூலை 16, புதன்கிழமை

சட்டவிரோத மணல் அகழ்வால் மரங்கள் அழிவு

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 07:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்

கிளிநொச்சி, அக்கராயன் ஆற்றுப் பகுதியில் மேற்கொள்ளப்படும் சட்டவிரோத மணல் அகழ்வு காரணமாக ஆற்றுநடுவே காணப்படும் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் அழிவடையும் அபாயநிலை உள்ளது என கிளிநொச்சி மாவட்ட நீர்ப்பாசன பொறியியலாளர் ஒருவர் வியாழக்கிழமை (16) தெரிவித்தார்.

அத்துடன், அக்கராயன் குளத்தின் கீழ் மேற்கொள்ளப்படும் பயிர்ச் செய்கையால் எதிர்காலத்தில் பாதிப்பு ஏற்;படும்.

சுமார் ஏழரை கிலோமீற்றருக்கு இந்த மணல் அகழ்வு நடைபெறுகின்றது. மணல் அகழ்வு காரணமாக அக்கராயன் மத்திய பகுதி, கிழக்குப் பகுதி, ஸ்கந்தபுரம், கண்ணகைபுரம் ஆகிய கிராமங்களின் நிலத்தடி நீர் எதிர்காலத்தில் குறைவடையக்கூடிய நிலைமை காணப்படுகின்றது.

அக்கராயன் ஆற்றில் மணல் அகழ்வு தொடருமானால் எதிர்காலத்தில் அக்கராயன் பிரதேசத்தில் பெருமளவிலான சூழலியல் ஆபத்துக்கள் ஏற்படுவதுடன், உயிர் ஆபத்துகள் ஏற்படக்கூடிய அபாயநிலை உருவாகும் என அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X