2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் இருவர் பலி

Menaka Mookandi   / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 07:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன், கி.பகவான், நடராசா கிருஸ்ணகுமார்

மாங்குளம் - ஓட்டுசுட்டான் வீதியில் தச்சடம்பன் பகுதியில் புதன்கிழமை (15) இரவு பஸ் ஒன்றும் கப் ரக வாகனமொன்றும் மோதியதில் இருவர் பலியாகினர்.

மூவர் படுகாயமடைந்து கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக மாங்குளம் பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி, மருதங்கடை வீதியைச் சேர்ந்த நவரத்தினம் ஜீவராஜ் (வயது 23), கைதடி நுணாவிலைச் சேர்ந்த தேவராஜசிங்கம் தயாபாலசிங்கம் (வயது 30) ஆகிய இருவரும் உயிரிழந்தனர்.

ஒட்டுசுட்டானிலிருந்து மாங்குளம் நோக்கி பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபை பஸ்ஸும் மாங்குளத்திலிருந்து ஒட்டுசுட்டானை நோக்கி பயணித்த கப் ரக வாகனமும் நேருக்குநேர் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .