Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
Menaka Mookandi / 2015 ஏப்ரல் 16 , மு.ப. 08:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ரஸீன் ரஸ்மின்
முல்லைத்தீவு - நெடுங்கேணி பிரதான வீதியின் ஆறாம் கட்டையில் இன்று வியாழக்கிழமை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒன்றரை வயது சிறுவன் உட்பட ஐந்து பேர் காயமடைந்துள்ளனர்.
மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவு நோக்கி வந்துகொண்டிருந்த தனியார் நிறுவனமொன்றின் முல்லைத்தீவு அலுவலகத்துக்குச் சொந்தமான வாகனமொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகி உள்ளதாக முள்ளியவளை பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான வாகனத்தில் நிறுவனத்தில் கடமை புரியும் முகாமையாளரை மாங்குளத்திலிருந்து ஏற்றிக்கொண்டு வரும்போது இவ்விபத்துச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது, முல்லைத்தீவு மாவட்ட செயலகத்தில் அனர்த்த முகாமைத்துவப் பிரிவில் கடமையாற்றும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர் தனது குடும்பத்துடன் விடுமுறை நிமித்தம் தமது சொந்த ஊருக்கு சென்று இன்று காலை முல்லைத்தீவுக்கு திரும்பியுள்ளார்.
இவ்வாறு முல்லைத்தீவுக்கு தனது குடும்பத்துடன் வருகை தந்த குறித்த உத்தியோகத்தர் மாங்குளத்தில் இருந்து முல்லைத்தீவுக்கு சென்ற தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான அந்த வாகனத்திலேயே பயணித்துள்ளனர் எனத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது இவர்கள் பயணித்த குறித்த வாகனம் வேகக் கட்டுப்பாட்டை இழந்துள்ளமையால் முல்லைத்தீவு – நெடுங்கேணி பிரதான வீதியின் ஆறாம் கட்டையில் வீதியை விட்டு விலகி அருகிலிருந்த மரமொன்றின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
இதில் பயணித்த ஐந்து பேரும் காயமடைந்த நிலையில் முல்லைத்தீவு மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதுடன், தனியார் நிறுவனத்தின் முகாமையாளர் மாஞ்சோலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவரும் நிலையில் சிறுவன் உட்பட நான்கு பேர் மேலதிக சிகிச்சைகளுக்காக யாழ். போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் முள்ளியவளை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago