2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

வீதி விபத்துகளில் 11 பேர் பலி

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 
இவ்வாண்டு ஜனவரி மாதம் முதல் மார்ச் மாதம் வரையான மூன்று மாத காலத்தில், கிளிநொச்சி மாவட்டத்தில் 42 வீதி விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் பதினொரு பேர் உயிரிழந்துள்ளதாக கிளிநொச்சி மாவட்ட வீதிப் போக்குவரத்துப் பொலிஸாரின் புள்ளிவிபர அறிக்கையில் தெரிவிக்கப்;பட்டுள்ளது.
 
2012ஆம் ஆண்டு 142 விபத்துக்கள் இடம்பெற்றுள்ளதுடன் 38 பேர் விபத்துக்களில் உயிரிழந்துள்ளதுடன் 2013ஆம் ஆண்டு இடம்பெற்ற 198  விபத்துக்களில் 22 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
அத்துடன், 2014ஆம்  ஆண்டு இடம்பெற்ற 198 விபத்துக்களில் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
 
இந்நிலையில், கடந்த மூன்று மாதங்களில் இடம்பெற்ற விபத்துக்களையடுத்து கடந்த 06ஆம் திகதி, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி தலைமையில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இதேவேளை, வீதி விபத்துக்களை தடுக்கும் வகையில் விசேட சுற்றுக்காவல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு, வீதி ஒழுங்கு விதிகளை மீறிய 7,125 சாரதிகளுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .