2025 ஜூலை 12, சனிக்கிழமை

தர்மபுரம் பொலிஸ் காவல் நிலையம், பொலிஸ் நிலையமாக தரமுயர்த்தப்படவுள்ளது

George   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 06:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்
 

கிளிநொச்சி  தர்மபுரம் பகுதியில் அமைந்துள்ள பொலிஸ் காவல் நிலையம், அடுத்த மாதம் முதல்; பொலிஸ் நிலையமாக மாற்றப்படவுள்ளதாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எட்மன் மகேந்திரா, வெள்ளிக்கிழமை(17) தெரிவித்துள்ளார்.
 
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளைப்பிரதேச செயலர் பிரிவின் கீழ் உள்ள தர்மபுரம் பகுதியில் கடந்த 2011ஆம் ஆண்டு முதல் பொலிஸ் காவல் நிலையம் இயங்கி வருகின்ற போதும் பல்வேறு தேவைகளுக்கும் இப்பகுதி மக்கள் கிளிநொச்சி பொலிஸ் நிலையத்துக்கே வர வேண்டிய நிலை காணப்படுகின்றது.
 
அத்துடன் தர்மபுரம் பகுதி அதிகளவான சனத்தொகையைக் கொண்டுள்ளதுடன் பல்வேறு வகையான குற்றச் செயல்களும் அதிகரித்துக் காணப்படுகின்றன.
 
இதனால் தர்மபுரம் பொலிஸ் காவல் நிலையம் பொலிஸ் நிலையமாக தரமுயர்தப்படுகின்றது.
 
இது தொடர்பாக கிளிநொச்சி மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர், ஊடகவியலாளருக்கு கருத்துத் தெரிவிக்கும் போது,
 
அடுத்த மாதம் முதல் தர்மபுரம் பொலிஸ் காவல் நிலையம் பொலிஸ் நிலையமாக இயங்கவுள்ளதுடன் கண்டாவளை பிரதேசத்;தை சேர்ந்த 10 கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கிய வகையில் இதன் சேவைகள் அமையவுள்ளது.

இதுவரை, கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கிய இராமநாதபுரம் பொலிஸ் காவல் நிலையம், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் கீழ் இயங்கவுள்ளது. 

அத்துடன், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தின் குற்றத்தடுப்பு பிரிவு, மது ஒழிப்பு பிரிவு, பல்வகை முறைப்பாட்டு பிரிவு, போக்குவரத்து பிரிவு உள்ளிட்ட சகல பிரிவுகளும் தனியாக இயங்கவுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .