Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
Sudharshini / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 08:38 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.றொசேரியன் லெம்பேட்
பாணந்துறையிலிருந்து மன்னார் மடுக்கரை பகுதிக்கு உறவினர்களுடன் சுற்றுலா சென்றிருந்த முஹமட் நஸீர் (18) என்ற இளைஞர் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளார் என முருங்கன் பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த 13ஆம் திகதி பாணந்துறையிலிருந்து மன்னார் சிலாபத்துரையில் உள்ள தமது உறவினர் வீட்டிற்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த் 21பேர் சென்றிருந்தனர்.
இந்நிலையில் வியாழக்கிழமை (16) காலை அனைவரும் நானாட்டான் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குட்பட்ட மடுக்கரை பகுதியிலுள்ள ஆற்றிற்கு சென்று ஆற்றங்கரையில் உணவு சமைத்து உண்டுள்ளனர்.
பின்னர், 3 இளைஞர்கள் பிளாஸ்ரிக் டியூப் ஒன்றை ஆற்றில் போட்டு அதில் ஏறி பந்து விளையாடிக்கொண்டிருந்த போது பந்து ஆற்றில் வீழ்ந்துள்ளது. இதனையடுத்து மேற்படி இளைஞன் பந்தை எடுக்க முற்பட்ட போது ஆற்றில் தவறி வீழ்ந்துள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதி மக்களும் கடற்படையினரும் இணைந்து தேடுதல்களை மேற்கொண்டனர். எனினும் குறித்த இளைஞன் மீட்கப்படவில்லை.
தொடர்ந்து வெள்ளிக்கிழமை(17) காலை முதல் தேடுதல் நடவடிக்கையில் மக்களும் கடற்படையினரும் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் மாலை 4.30 மணியளவில் குறித்த இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
முருங்கன் பொலிஸார் சடலத்தை பிரேத பரிசோனைக்காக மன்னார் வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டனர். சடலம் வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டதையடுத்து, சடலத்தை வைத்தியசாலையில் பார்வையிட்ட திடீர் மரண விசாரனை அதிகாரி சடலத்தை உறவினர்களிடம் ஒப்படைக்க உத்தரவிட்டார்.
இந்த நிலையில் சடலம் உடனடியாக பாணந்துறைக்கு கொண்டு செல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரனைகளை முருங்கன் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
47 minute ago
3 hours ago
4 hours ago