2025 ஜூலை 12, சனிக்கிழமை

வன்னி பாடசாலைகளின் ஆசிரியர் பற்றாக்குறை நீக்கப்பட வேண்டும்: டக்ளஸ்

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 09:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

வடக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் கீழ் இயங்கிவரும் வன்னிப் பகுதி பாடசாலைகளில் காணப்படும் ஆசிரியர் வளப் பற்றாக்குறைகளைத் தீர்ப்பதற்கும் உடன் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா அரசாங்கத்திடம் வலியுறுத்தியுள்ளார்.

விஷேட கல்வித் தேவையுடைய மாவட்டங்களாக கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்கள் அடையாளப்படுத்தப்பட்டுள்ளமை தொடர்பிலான அரசாங்கத்தின் நடவடிக்கை பாராட்டத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இவ் விடயம்  தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்துள்ள செயலாளர் நாயகம்,
யுத்த சூழ்நிலைகள் காரணமாக கடந்த காலங்களில் வடக்கின் கல்வித் தரம் மிகவும் பின்னடைவு கண்டிருந்த சூழ்நிலையில், அதனை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு பல்வேறு முயற்சிகளில் படிப்படியாக நாம் ஈடுபட்டிருந்தோம்.

அந்த வகையில் இன்று யாழ். மாவட்டத்தின் கல்வித் தரமானது நாட்டின் ஏனைய மாவட்டங்களின் கல்வித் தரங்களைவிட திருப்திதரக் கூடிய வகையில் உயர்ந்திருக்கிறது. எனினும் பின்தங்கிய நிலையில் காணப்படுகின்ற பகுதிகளின் கல்வி நிலை உயர, உரிய அனைத்துத் தரப்பினரும் அதிக அக்கறை கொண்டு செயற்பட வேண்டியுள்ளது.

குறிப்பாக, ஆசிரிய வளங்கள் பகிரப்பட வேண்டியது அவசியமாகும். அதே போன்று ஏனைய வளங்கள் தொடர்பிலும் கவனமெடுத்து செயற்பட்டால் இப்பகுதிகளினதும் கல்வித் தரத்தை கூடியவிரைவில உயர்த்த முடியுமென்றும் செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தமை குறிப்பிடத்தக்கதாகும்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .