2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

கற்பிட்டி மீனவர் சிலாவத்துறையில் சடலமாக மீட்பு

Thipaan   / 2015 ஏப்ரல் 18 , மு.ப. 11:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார், சிலாவத்துறை கடற்கரையில் கரை ஒதுங்கிய இளைஞர் ஒருவருடைய சடலத்தை, பொலிஸார் மீட்டு நேற்று வெள்ளிக்கிழமை (17) இரவு மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

சடலமாக மீட்கப்பட்டவர் கற்பிட்டியச் சேர்ந்த சஞ்சீவ குமார பெர்ணான்டோ (வயது 21) என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மன்னார் வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர்.

கற்பிட்டியைச் சேர்ந்த 4 மீனவர்கள், முசலி பிரதேச  செயலாளர் பிரிவுக்குட்பட்ட சிலாவத்துறை கடற்கரை பகுதியில் வாடி அமைத்து தங்கி இருந்து மீன்பிடியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.

குறித்த 4 மீனவர்களும் வாடியில் இருந்த போது, உயிரிழந்த நபரான சஞ்சீவ குமார பெர்ணாண்டோ, நேற்று வெள்ளிக்கிழமை (17) காலை 5 மணியளவில் வாடியில் இருந்து காலைக்கடன் கழிப்பதற்காக வெளியில் சென்றுள்ளார்.

எனினும், நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வராததால் ஏனைய மீனவர்கள் அவரை தேடியுள்ளனர்.

இந்த நிலையில், காணாமல் போன மீனவர் நேற்று வெள்ளிக்கிழமை மாலை 7 மணியளவில் சிலாவத்துறை கடற்கரையில் சடலமாக கரை ஒதுங்கியுள்ளார் என தெரிய வந்துள்ளது.

சிலாவத்துறை பொலிஸாருக்கு  வழங்கப்பட்ட தகவலின் அடிப்படையில்  சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார், சடலத்தை மீட்டு  மன்னார் பொது வைத்தியசாலையில் ஒப்படைத்துள்ளனர்.

சடலம், தற்போது மன்னார் பொது வைத்தியசாலையின் பிரேத அரையில் வைக்கப்பட்டுள்ளது. சடலத்தில் காயங்கள் காணப்படுகின்ற நிலையில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .