2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

அறநெறிப்பாடசாலை கட்டடம் திறப்பு

Kogilavani   / 2015 ஏப்ரல் 19 , பி.ப. 01:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

மன்னார் காட்டாஸ்பத்திரி ஸ்ரீ முத்துமாரியம்மன் அறநெறிப்பாடசாலை கட்டடத்திறப்பு விழா ஞாயிற்றுக்கிழமை(19) காலை மன்னார் மாவட்ட அறநெறிப் பாடசாலைகளின் இணையத்தின் தலைவர் சிவசிறி மஹா தர்மகுமார குருக்கள் தலைமையில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மன்னார் பிரதேசச் செயலாளர் கே.எஸ்.வசந்தகுமார், இந்து மஹா சபையின் தலைவர் எஸ்.சி.இராமகிருஷ்ணன் மற்றும் மன்னார் மாவட்ட இந்து, முதியோர் நற்பணி மன்றத்தின் தலைவர் பவமொழி பவன் ஆகியோர் கலந்துகொணடனர்.

இதன்போது குறித்த அறநெறிப்பாடசாலை கட்டடம் விருந்தினர்களினால் வைபவ ரீதியாக திறந்து வைக்கப்பட்டதோடு மாணவர்களுக்கும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .