2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

தண்டவாளத்தை தலையணையாக பயன்படுத்தியவர் பலி

Gavitha   / 2015 ஏப்ரல் 20 , மு.ப. 06:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.றொசேரியன் லெம்பேட்

தண்டவாளத்தை தலையணையாக பயன்படுத்தியவர் ரயில் மோதி பலியான சம்வமொன்று மன்னாரில் இடம்பெற்றுள்ளது.
தலைமன்னாரில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயில் மோதியே மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான என்.ஜெரால் காட்டர்(வயது-35) என்பவரே  உயிரிழந்துள்ளார் என்று மன்னார் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த சம்பவம், நேற்று இரவு 1.30 மணியளவில் இடம்பெற்றுள்ளது. தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் கிராமத்தில் உள்ள தனது வீடடுக்கு பின் பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தில் படுத்து கிடந்த போதே குறித்த குடும்பஸ்தர் மீது ரயில் மோதியுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனைகளின் மூலம் தெரியவருகின்றது.

தண்டவாளத்தில்  சடலம் ஒன்று கிடப்பதை இன்று(20) திங்கட்கிழமை காலை அவதானித்த மக்கள், பொலிஸாருக்கு தகவல் வழங்கியதை அடுத்து ஸ்தலத்துக்கு விரைந்த மன்னார் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .