2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

போக்குவரத்து சேவையை நீடிக்குமாறு கோரிக்கை

George   / 2015 ஏப்ரல் 20 , பி.ப. 12:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-நடராசா கிருஸ்ணகுமார்.

துணுக்காயிலிருந்து பாண்டியன் குளம் வரை நடைபெறும் போக்குவரத்துச் சேவையை நட்டாங்கண்டல், மூன்று முறிப்பு வரை நீடிக்குமாறு அப்பகுதி மக்கள் மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்திடம் கோரிக்கை முன்வைத்துள்ளனர்.

முல்லைத்தீவு மாந்தை கிழக்கு பிரதேச செயலர் பிரிவுக்குட்பட்ட நட்டாங்கண்டல், பனங்காமம், வீரப்பராயர் குளம், மருதங்குளம் ஆகிய பகுதிகளை உள்ளடக்கிய 161 குடும்பங்ளைச் சேர்ந்த 484 பேரும் கொம்புவைத்தகுளம், மூன்றுமுறிப்பு ஆகிய இடங்களை உள்ளடக்கிய 173 குடும்பங்களைச் சேர்ந்த 555 பேரும் வாழ்ந்து வருகின்றனர்.

இப்பகுதிக்கான போக்குவரத்து சேவைகள் இல்லாமையால், வைத்தியசாலை போன்ற அவசிய தேவைகளுக்கு சென்று வருவதில் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

துணுக்காய் பேரூந்து நிலையத்திலிருந்து பாண்டியன் குளம் வரை நடைபெறும் பஸ் சேவையை நட்டாங்கண்டல், மூன்று முறிப்பு வரை நீடிக்குமாறு மக்கள் கோரிக்கை முன்வைத்துள்ளனர். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .