2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை

விதைத்து ஒரு மாதகாலமாகியும் மானிய உரம் வழங்கப்படவில்லையென விசனம்

George   / 2015 ஏப்ரல் 22 , மு.ப. 06:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

-சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி மாவட்டத்தில் சிறுபோக பயிர்ச் செய்கை செய்யப்பட்டு ஒரு மாதகாலம் கடந்த நிலையிலும் தங்களுக்கான மானிய உரம் வழங்கப்படவில்லையென கிளிநொச்சி மாவட்ட விவசாயிகள் சங்கங்கள் தெரிவித்தன.

கிளிநொச்சி மாவட்டத்தில் இந்தவருட சிறுபோக செய்கையில் 9,500 ஏக்கரில் நெற்செய்கையும், 1,500 ஏக்கரில் சிறுதானியச் செய்கையும் செய்யப்படுகின்றன. 

பயிர்ச் செய்கை மேற்கொள்ளப்பட்டு 1 மாதகாலம் ஆகியும் உரமானியம் இன்னமும் வழங்கப்படவில்லை என சங்கங்கள் கூறின.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் இ.தயாரூபனைத் தொடர்புகொண்டு கேட்டபொழுது,

சிறுபோக செய்கையில் பயிர்ச் செய்கை மேற்கொள்ளும் விவசாயிகளுக்கு உரமானியம் வழங்குவதற்கு விவசாய அமைப்புக்கள் சரியான பட்டியலை தரவில்லை. பட்டியலைத் தரும்படி கோரியும் இன்னமும் அவர்கள் அதனைத் தரவில்லை.

ஒரு விவசாயிக்கு 5 ஏக்கருக்கு உரமானியம் வழங்கப்படும். பட்டியல் தரப்பட்டாலே எந்தளவு ஏக்கருக்கு உரமானியம் வழங்கவேண்டும் என்று கணக்கிட்டு வழங்கமுடியும் என்றார். 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .