Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 12, சனிக்கிழமை
George / 2015 மே 07 , மு.ப. 10:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
-நா.நவரத்தினராசா
இயற்கை மரணமடைந்த முன்னாள் வடமாகாண சபை உறுப்பினர் வீரபாகு கனகசுந்தரசுவாமிக்கு பதிலாக நியமிக்கப்பட்ட க.சிவனேசன், தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராசாவை கட்சி அலுவலத்தில் வியாழக்கிழமை (07) சந்தித்தார்.
இந்தச் சந்திப்புக் குறித்து சிவனேசன் கருத்துக்கூறுகையில்,
எங்களுடைய முல்லைத்தீவு பிரதேசம் மிகவும் பின்தங்கிய பிரதேசமாக உள்ளது. அந்தப் பகுதியில் இருக்கின்ற மக்கள் என்னை தெரிவு செய்துள்ளார்கள். அதற்கு நான் நன்றியுடையவனாக இருப்பேன். மாகாண சபைக்கூடாக என்னால் இயன்ற அனைத்து சேவைகளையும் அந்த மக்களுக்கு ஆற்றுவேன்.
வடமாகாண சபையின் அதிகாரங்கள் விடயத்தில் நானும் தற்போதைய வடமாகாண சபையின் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்களும் இணைந்து மாகாண சபையை பலப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்கு முற்றுமுழுதாக ஒத்துழைப்பு வழங்குவதாகவும் அவர் கூறினார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
32 minute ago
2 hours ago
3 hours ago