2025 ஜூலை 04, வெள்ளிக்கிழமை

கலந்துரையாடல்

Sudharshini   / 2015 மே 30 , மு.ப. 05:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.றொசேரியன் லெம்பேட்

படுகொலை செய்யப்பட்ட புங்குடுதீவு மாணவி வித்தியாவின் வீட்டுக்கு நேற்று வெள்ளிக்கிழமை (29) மன்னார் மறைமாவட்ட ஆயரின் பிரதிநிதிகள் விஜயம் செய்து, குறித்த மாணவியின் பெற்றோர் மற்றும் சகோதரர்களுடன் கலந்துரையாடியதோடு தனது அனுதாபங்களையும் தெரிவித்துள்ளனர்.

மன்னார் மறைமாவட்ட ஆயர் அதி வணக்கத்துக்குரிய இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை சுகயீனம் காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில், ஆயரின் பிரதிநிதிகளாக மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை, தமிழ் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் வடமாகாண சபை உறுப்பினரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தீவக பொறுப்பாளருமான விந்தன் கனகரத்தினம் ஆகியோர் வித்தியாவின் வீட்டிற்கு சென்று கலந்துரையாடினர்.

இதன்போது வித்தியாவின் கொலை தொடர்பில் குற்றவாழிகளுக்கு தகுந்த தண்டனை வழங்கப்பட வேண்டும் எனவும் வித்தியாவுக்கு நடந்தது போல் இனி யாருக்கும் நடக்கக்கூடாது என  பெற்றோர் தெரிவித்துள்ளனர்.

மேலும், எங்களுக்கு எந்த வித உதவிகளும் வேண்டாம். ஆனால் குற்றவாழிகளுக்கு அதிகூடிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என தெரிவித்ததோடு, தற்போது தாம் பாதுகாப்பற்ற சூழலிலே வாழ்ந்து வருவதாக வித்தியாவின் சகோதரர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே, தமது பாதுகாப்பை உறுதிப்படுத்துவதோடு இவர்களுக்கு அதி கூடிய தண்டனையை வழங்க வேண்டும் என வித்தியாவின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன், மறைமாவட்ட குரு முதல்வர் அன்ரனி விக்டர் சோசை மற்றும் வடமாகாண சபை உறுப்பினர் விந்தன் கனகரத்தினம் ஆகியோரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .