2025 ஜூலை 03, வியாழக்கிழமை

'பனை மரங்கள் அழிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கவேண்டும்'

Thipaan   / 2015 ஜூன் 01 , பி.ப. 01:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

- சுப்பிரமணியம் பாஸ்கரன்

கிளிநொச்சி, பளைப் பகுதியில் பெருமளவான பனை மரங்கள் அழிக்கப்பட்டு வருவதாகவும் இதனைக் கட்டுப்படுத்த உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இப்பகுதி சீவல் தொழிலாளிகள் பளைப் பிரதேச செயலகத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கிளிநொச்சி மாவட்டத்தின் அதிகூடிய பனை வளத்தைக் கொண்ட பகுதியாக காணப்பட்ட பச்சிலைப்பள்ளி (பளை) பிரதேசத்தில் காணப்பட்ட ஏராளமான பனைமரங்கள் கடந்த யுத்தகாலத்தில் அழிவடைந்தன.

யுத்தம் முடிந்த பின்னர் ஏஞ்சிய பனைமரங்கள் இப்பகுதியில் மீள் குடியேறிய மக்களின் வீட்டுத்திட்ட தேவைகளுக்கு வெட்டப்பட்ட நிலையில், தற்போது இப்பகுதியில் உள்ள பனை மரங்கள் வகை தொகையின்றி வெட்டப்பட்டு வேறு இடங்களுக்கும் வெளி மாவட்டங்களுக்கும் கொண்டு செல்லப்படுகின்றன.

பனை மரங்;களின் வருமானத்தை வாழ்வாதாரமாக கொண்டு வாழ்ந்து வரும் சீவல் தொழிலாளிகளின் எதிர்கால வாழ்வாதாரம் பாதிக்கப்;படுகின்ற நிலையில், உரிய அதிகாரிகள் இது தொடர்பில் அக்கறையெடுக்க வேண்டும் என தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .