Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Princiya Dixci / 2015 ஜூன் 04 , மு.ப. 11:43 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டச் செயலக வளாகத்தின் பின் பகுதியில் அமைந்திருந்த பழையான கட்டடம் இடிக்கப்பட்டுக்கொண்டிருந்த போது, கட்டட இடிபாட்டில் சிக்கி தொழிலாளி ஒருவர் காயமடைந்த நிலையில் இன்று வியாழக்கிழமை (04) மாலை மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மன்னார் மாவட்டச் செயலகத்தின் பின்னால் முழுமையாக சுற்று மதில் அமைக்கப்பட்ட நிலையில் மாவட்டச் செயலகத்தின் குறித்த பகுதியில் கடந்த காலங்களில் வியாபார நிலையமாக காணப்பட்ட குறித்த கட்டடம் கடந்த சில தினங்களாக உடைக்கப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இன்று காலை முதல் இரண்டு தொழிலாளர்கள் குறித்த கட்டடத்தின் எஞ்சிய பகுதிகளை உடைத்துக்கொண்டிருந்த போது கட்டடத்தின் கீழ் நின்று வேலை செய்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவர் மீது கட்டடம் உடைந்து வீழ்ந்துள்ளது.
எனினும், குறித்த தொழிலாளியின் கால் கட்டட உடைவுகளில் மாட்டிக்கொண்ட நிலையில் நீண்ட நேரத்தின் பின் வீதியால் சென்றவர்களின் உதவியும் குறித்த தொழிலாளி காப்பாற்றப்பட்டு உடனடியாக மன்னார் பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
55 வயதுடைய குறித்த நபரின் கால் பகுதியில் எழும்பு முறிவு மற்றும் தலை உட்பட பல பகுதிகளில் காயங்கள் ஏற்பட்டுள்ள நிலையில் மன்னார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago