Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 25, புதன்கிழமை
Thipaan / 2015 ஜூலை 18 , மு.ப. 05:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஏ.எச்.ஏ. ஹுஸைன்
மட்டக்களப்பு மாவட்டம் காத்தான்குடி-03, பழைய விதானையார் வீதியிலுள்ள வீடொன்றில் சனிக்கிழமை அதிகாலை சமையல் எரிவாயுக் கசிவின் காரணமாக ஏற்பட்ட தீயினால் வீடு முற்றாக சேதமடைந்துள்ளதாக காத்தான்குடிப் பொலிஸார் தெரிவித்தனர்.
வெள்ளிக்கிழமை நள்ளிரவுக்குச் சற்றுப் பிந்தி 12.30 மணியளவில் வீட்டிலிருந்த சமையல் எரிவாயு சிலின்டர் ஒன்றிலிருந்து எரிவாயு கசிந்ததைத் தொடர்ந்து இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதனால் வீட்டின் உட்கூரையும், ஓடுகளும் வீட்டிலிருந்த பொருட்களும் எரிந்து நாசமாகியுள்ளன.
எவ்வாறாயினும் தீ ஏற்பட்டபொழுது வீட்டிலுள்ளவர்கள் வெளியில் ஓடித் தப்பியதனால் எவருக்கும் காயம் ஏற்படவில்லை என வீட்டுரிமையாளர் கூறினார்.
இந்த சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
11 minute ago
16 minute ago
28 minute ago