Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 13, ஞாயிற்றுக்கிழமை
George / 2017 ஜனவரி 26 , மு.ப. 06:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால், வவுனியாவில் நடாத்தப்படும் உணவுத்தவிர்ப்பு போராட்டத்துக்கு, ஆதரவு தெரிவிக்கும் வகையில், நாளை காலை 9 மணியில் இருந்து, மாலை 3 மணிவரை அடையாள உண்ணாவிரதப் போராட்டம், கிளிநொச்சி கந்தசாமி கோவில் முன்றலில் நடைபெறவுள்ளது.
இப்போராட்டத்தில், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், அரசியல் தலைவர்கள். பல்கலைக்கழக மாணவர்கள், வர்த்தகர்கள், பொதுஅமைப்பினர், இளைஞர்கள் அனைவரையும் கலந்துக் கொள்ளுமாறு ஏற்பாட்டாளர்கள் அறிவித்துள்ளனர்.
இதேவேளை, நாளை காலை 9 மணிக்கு, முல்லைத்தீவு மாட்டச் செயலகத்துக்கு முன்னால், மாபெரும் கவனயீர்ப்பு போராட்டமொன்றை நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன் இதில் கலந்துகொள்ளுமாறு அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
12 Jul 2025