Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2018 செப்டெம்பர் 11 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.றொசேரியன் லெம்பேட்
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் இருந்து, வவுனியா வைத்தியசாலைக்கு, கடந்த மூன்று தினங்களில், 22 கர்ப்பிணிகள் மாற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் மகப்பேற்று வைத்திய நிபுணர், வைத்தியசாலையில் இருந்து வெளியேறி உள்ளமையே, குறித்த நிலைமைக்குக் காரணமெனத் தெரியவருகின்றது.
மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையின் பிரசவ விடுதியில் கடமையிலிருந்த வைத்தியர் ஒருவர் மீது, கடந்த வியாழக்கிழமை (6) காலை தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இந்தச் சம்பவத்தைக் கண்டித்து, அந்த வைத்தியசாலை வைத்தியர்கள், ஒருநாள் பணிப்பகிஷ்கரிப்பில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில், மேற்படி தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
இதையடுத்து, மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலையில் தமக்குப் பாதுகாப்பு இல்லையெனத் தெரிவித்து, தாக்குதலுக்குள்ளான வைத்தியர் மற்றும் மகப்பேற்று வைத்திய நிபுணர் ஆகியோர், வியாழக்கிழமை (6) இரவு, வைத்தியசாலையில் இருந்து வெளியேறினர்.
இந்த நிலையில், வெள்ளிக்கிழமை (7) முதல் ஞாயிற்றுக்கிழமை (9) வரையான மூன்று தினங்களில் மாத்திரம், மகப்பேற்றுக்காக மன்னார் மாவட்டப் பொது வைத்தியசாலைக்கு வருகைதந்த 22 கர்ப்பிணிகள், அம்பியூலன்ஸ் வண்டிகள் மூலம், வவுனியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
இதேவேளை, வவுனியா வைத்தியசாலையில் தற்போது அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளமையால், மேலதிகமாக உள்ள கர்ப்பிணிகளை, அங்கிருந்து யாழ்ப்பாணப் பொது வைத்தியசாலைக்கு மாற்றிவருவதாக, வைத்தியசாலை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன
8 minute ago
12 minute ago
18 minute ago
38 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
12 minute ago
18 minute ago
38 minute ago