2025 ஓகஸ்ட் 13, புதன்கிழமை

24 கிலோமீற்றர் தூரம் நடந்து, கல்வி கற்கும் மாணவர்கள்

சுப்பிரமணியம் பாஸ்கரன்   / 2018 பெப்ரவரி 15 , பி.ப. 01:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

முல்லைத்தீவு மாந்தைகிழக்கு அம்பாள்புரம் கிராமத்திலிருந்து 24 கிலோமீற்றர் தூரம் நடந்தே மாணவர்கள் பாடசாலைக்கு சென்றுவர வேண்டியுள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர்.

அம்பாள்புரம் கிராமத்திலிருந்து தினமும் 85க்கும் மேற்பட்ட மாணவர்கள் 12 கிலோ மீற்றர் தூரம் நடந்தே வன்னி விளாங்குளம் பாடசாலைக்குச் செல்லவேண்டியுள்ளதுடன், பாடசாலை நிறைவடைந்து மீண்டும் நடந்தே வீட்டுக்குச் செல்லவேண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளை, இது தொடர்பாக 2010 ஆம் ஆண்டிலிருந்து அரசியல்வாதிகள், அரச அதிகாரிகளுக்கு மகஜர்களைக் கையளித்துள்ளோம். ஆனால் எவ்வித நடவடிக்கைகளும் இல்லை.

மேலும், இக்கிராமத்தில் உள்ள குடும்பங்கள், அன்றாடம் கூலி வேலை செய்பவர்களாகவும், நன்னீர் மீன்பிடியில் ஈடுபடுவோராகவும் உள்ளனர். எனவே வறுமை காரணமாக தமக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்த முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.

அத்துடன் காட்டுவழியாக மாணவர்கள் பாடசாலைக்குச் சென்றுவருவதால் அவர்களுக்கு உயிர் அச்சுறுத்தலும் உள்ளதாக பெற்றோர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .