Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Niroshini / 2021 மே 20 , பி.ப. 02:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-க. அகரன்
வவுனியா மாவட்டத்துக்கு, 27 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான இயற்கை உரம் தேவையாகவுள்ளதாக, வவுனியா மாவட்டக் கமநல அபிவிருத்தி திணைக்களத்தின் உதவி ஆணையாளர் என்.விஸ்னுதாசன் தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்த அவர், விவசாயத்துக்கான இராசாயன பசளை மானிய அடிப்படையில் வழங்கப்பட்டு வந்ததாகவும் இதனால் ஏற்பட்ட சிறுநீரக பிரச்சினை, சூழல் பிரச்சினைகளைக் கருத்திற்கொண்டு, இராசாயன பசளைகளை முற்றுமுழுதாக நிராகரித்து, சேதன, இயற்கை பசளைகளை உற்பத்திசெய்யும் திட்டத்தை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது என்றும் சுட்டிக்காட்டினார்.
இயற்கை பசளையை குறிப்பிட்ட காலத்தில் உற்பத்தி செய்யமுடியாதெனத் தெரிவித்த அவர், குறைந்தது நான்கு தொடக்கம் ஐந்து மாதங்கள் தேவை எனவும் தற்போது தமக்கு உற்பத்தி செய்வதற்கான காலம் மிகவும் குறைவாக உள்ளதாகவும் கூறினார்.
எனவே, உற்பத்தியாளர்கள், முயற்சியாளர்கள் விரைவாக அதனை முன்னெடுக்க வேண்டுமென வலியுறுத்திய அவர், அதற்கு தமது திணைக்களம் மற்றும் விவசாய அமைச்சின் முழுமையான உதவிகளும் கிடைக்குமென்றும் கூறினார்.
'எமது மாவட்டத்தில் இயற்கை உரங்களை தயாரிப்பதற்கான சகல வளங்களும் உள்ளது. அதனை உற்ப்பத்தி செய்பவர்களே பற்றாக்குறையாக உள்ளனர்.
'எமது மாவட்டத்தில், 27 ஆயிரம் மெற்றிக்தொன்னுக்கும் அதிகமான இயற்கை உரம் தேவையாக உள்ளது. இவற்றை பூர்த்திசெய்வதற்கு அதிகமானவர்கள் முன்வர வேண்டும். இல்லாவிடில் பசளைதட்டுப்பாடு விளைச்சல் குறைவு போன்ற பிரச்சினைகள் ஏற்படலாம்.
'எனவே இதற்கான திட்டமுன்மொழிவுகளை கமநல அபிவிருத்தி திணைக்களங்களுக்குச் சமர்ப்பித்தால், அதற்குரிய உதவிகள் தங்களால் வழங்கப்படும்' என்றும், என்.விஸ்னுதாசன் தெரிவித்தார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025