2025 ஜூலை 23, புதன்கிழமை

6 மில்லியன் ரூபாய் செலவில் ஆசிரியர் விடுதி திறப்பு

Kogilavani   / 2014 ஜனவரி 23 , மு.ப. 04:44 - 0     - {{hitsCtrl.values.hits}}


-நவரத்தினம் கபில்நாத்


பல்வேறு அரசசார்பற்ற நிறுவனங்களின் நிதியுதவியுடன் 6 மில்லியன் ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்பட்ட முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் ஆசிரியர் விடுதி புதன்கிழமை (22) திறந்து வைக்கப்பட்டது.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் அதிபர் சி.சுப்பிரமணியேஸ்வரன் தலைமையில் இடம்பெற்ற கட்டட திறப்பில் இத்தாலி நாட்டின் இலங்கை - மாலைதீவுக்கான தூதுவர் வப்றிசோ பியோபிஜா கலந்துகொண்டு விடுதியினை திறந்து வைத்திருந்தார்.

தூர இடங்களில் இருந்து கற்பித்தில் நடவடிக்கைக்காக வரும் ஆசியரியர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்க்கும்பொருட்டு இவ்விடுதி கட்டப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக முல்லைத்தீவு மாவட்ட அரசாங்க அதிபர் நா. வேதநாயகம், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் தி.பிரதாபன், சேவாலங்கா நிறுவனத்தின் திட்டப்பணிப்பாளர் அ.முகுந்தன் முல்லைத்தீவு மாவட்ட வலயக்கல்வி பணிப்பாளர் அ.ராஜ்குமார் ஆகியோர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .