2021 ஓகஸ்ட் 01, ஞாயிற்றுக்கிழமை

இந்தவார பலன்கள் (12.09.2010 – 18.09.2010)

A.P.Mathan   / 2010 செப்டெம்பர் 12 , மு.ப. 07:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இந்தவார பலன்கள் (12.09.2010 – 18.09.2010)

 

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அதிகாரமும் ஆணவமும் கண்டு அஞ்சாமல் அடக்குமுறைக்கு எதிராக குரல் கொடுக்கும் மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் சில பிரச்சினைகள், சிக்கல்கள் ஏற்பட்டு நீங்கும். நிதானத்துடன் செயல்படவும். தொடங்கும் காரியத்தில் தடைகள், தோல்விகள் ஏற்படக்கூடும். இசையில் ஈடுபாடு அதிகரிக்கும், அதனால் மன அமைதி ஏற்படும். குடும்பத்தில் விஷேசங்கள் நடைபெற வாய்ப்புண்டு. அதன் மூலம் உறவினர்கள் அன்யோன்யம் ஏற்படும். தேவையற்ற வாக்குவாதம் ஏற்படக்கூடும், வார்த்தைகளை பிரோயோகிப்பதில் நிதானம் தேவை. வார இறுதியில் சிலவிதமான மன நிறைவு தரக்கூடிய நிகழ்வுகள் ஏற்படக்கூடும். புதிய பொன், பொருள் சேரும். பெரியோர்களின் அன்பும் ஆசிர்வாதமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 13ஆம் திகதி காலை 07.32 மணியிலிருந்து செப்டெம்பர் 15ஆம் திகதி மாலை 2.19 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

சாதுவாக இருக்கும் நீங்கள் யாராவது சீண்டினால் சீறிப் பாய்வீர்கள். மனித நேயம் அதிகமுள்ள இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் மனதுக்கு பயத்தை உணர்த்தும் சில சம்பவங்கள் நடக்கக்கூடும். உணவால் அஜீரண கோளாரு ஏற்படக்கூடும். உடலால் சில சில சிரமங்கள் ஏற்படகூடும். தொழில் முன்னேற்றம் தாமதமாகும், அதனால் பணவரவில் தடையும் ஏற்படும். வரவுக்கு மீறிய செலவும் ஏற்படும். வாகன சாரதிகளுக்கு தூர பிரயாணங்களினால் லாபம் ஏற்படும்.  அயல்தேசத்திலிருந்து இன்பகரமான தகவல் கிடைக்கும். கேட்பார் பேச்சை கேட்டு நடந்தால் பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். வார இறுதியில் சுமூகமான முறைக்கு திரும்பும். அவதானத்துடன் நடக்கவும். இறை வழிபாடு செய்வதில் அதிக அக்கறை செலுத்தவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்   
வழிபாடு: பிரம்மா

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 15ஆம் திகதி மாலை 02.19 மணியிலிருந்து செப்டெம்பர் 17ஆம் திகதி காலை 12.49 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

‘கூடி வாழ்ந்தால் கோடி நன்மை’ என்பதை தினசரி வாழ்க்கையில் பின்பற்றும் மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் வாக்குவாதம் ஏற்படக்கூடும். வார்த்தைகளை நிதானத்துடன் பிரயோகிக்கவும். புதிய எதிர்பார்ப்புக்களில் தடை ஏற்பட்டு நீங்கும். பிறர் பிரச்சினைகளில் தலையிடுவதன் மூலம் அது நமக்கு பாதகமாக அமையும். குடும்பத்திற்காக அதிக செலவு செய்ய நேரிடும். அரசாங்க தொழில் வாய்ப்புக்கள் கிடைக்கக்கூடும். மன நிறைவான தூக்கம் கிடைக்கும். பணவரவுகளில் தாமதம் ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஆர்வம் காட்டவும். தொழிலில் சக ஊழியர்களால் மனகசப்பு ஏற்பட வாய்ப்புண்டு. உடல் சோர்வு ஏற்படக்கூடும். வார இறுதியில் ஏற்பட்ட பிரச்சினைகள் நீங்கி மன நிறைவுடன் இறைவனது ஆசிர்வாதம் பெற்று இன்பமாய் வாழலாம்.        

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: சிவப்பு, ஒரேஞ்
வழிபாடு: சிவன் (சூரியன்)

சந்திராஷ்டமம்
செப்டெம்பர் 17ஆம் திகதி காலை 12.49 மணியிலிருந்து செப்டெம்பர் 20ஆம் திகதி மாலை 01.20 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.

 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

கடமை உணர்வுடன் காரியத்தில் கண்ணாக இருந்து சாதிக்கும் கடக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் நல்ல செய்திகள் கேள்விபடுவீர்கள், அதன்மூலம் மனம் நிறைவு பெறும். அதிக நாள் தடைப்பட்டிருந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புக்கள் மூலம் லாபம் கிடைக்கும். குடும்பத்தில் விடுபட்டுப்போன உறவுகள் துளிர்க்கும், விசேடமாக பெண்களால் அனுகூலம் ஏற்படும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். அரசாங்க சலுகைகள் கிடைக்கும். வார இறுதியில் பெரியோர்களின் அன்பும் ஆசிர்வாதமும் கிடைக்கும். இவ்வாரத்தில் புதிய காரியங்களை தொடங்க கூடியதாயிருக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா


 

மகம், பூரம்,  உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

சிந்தனை சக்தியும் சீர்திருத்த எண்ணங்களும் உடைய நீங்கள், பிறரை கண்டு பொறாமை கொள்ளாத சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் இசை துறையில் அதிக ஈடுபடுவீர்கள். புதிய உத்திகளை கையாளுவதன் மூலம் வெற்றி காண்பீர்கள். குடும்பமாக வினோதங்களில் ஈடுபட வாய்ப்புண்டு. திடீர் பயணங்கள் உற்சாகத்தை தரும். பெண்களின் சலுகையினால் மகிழ்ச்சி. தேவையற்ற சங்கடங்கள், மனகுழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். உங்கள் எண்ணம் போல் நாவுக்கு சுவையான உணவு கிடைக்கும். மகான்களை சந்தித்து ஆசிர்வாதம் பெறக் கூடிய சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 18
அதிர்ஷ்ட நிறம்:  ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி

 

 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தொட்ட காரியத்தில் துலக்கும் ஆற்றல் கொண்ட நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்கும் ஆற்றல் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் கடின உழைப்பினால் வெற்றி பெறலாம். பணபுழக்கம் இருந்தாலும் செலவுகள் துரத்தும். உடலுக்கு ஒவ்வாத உணவை தவிர்ப்பதன் மூலம் உடல் ஆரோக்கியத்தை பேணலாம். தொழிலில் சக ஊழியர்களுடன் சுமுகமான உறவை வைத்து கொள்ளவும், இல்லையெனில் மனகசப்புக்கள் ஏற்படக்கூடும். குடும்பத்தில் உறவினர்கள் மத்தியில் அன்பும் மகிழ்ச்சியும் உண்டாகும். எதிர்பாராத நல்ல செய்திகள் மன அமைதியை தரும். விசேட பிராத்தனைகள், பூஜைகளில் ஈடுபடுவதன் மூலம் நீண்ட நாள் கனவுகள் நிறைவேறும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.

துயரங்கள் துரத்தினாலும் வெளிக்காட்டாமல் புன்னகையுடன் உற்சாகமாக பேசும் துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் நன்மை பயக்கும் காரியங்கள் செய்ய வழிகிடைக்கும். எதிர்பாராத செய்திகள் உற்சாகத்தை தரும். மேலதிகாரிகளுடனும் பகைவர்களுடனும் வீண் சகவாசங்களை தவிர்க்கவும். தேவையற்ற கருத்து மோதல்களினால் மனசங்கடங்கள் உருவாக வாய்ப்புக்கள் உண்டு. எனவே நாவடக்கதுடன் செயற்படவும். பணவிடயங்களில் தமதம் ஏற்படக்கூடும். ஆகையால் பணம் சம்பாதிப்பதில் அதிக அக்கறை எடுக்கவும். அதிகார பதவியில் இருப்பவர்களால் ஆதாயம் உண்டு. உடலுக்கு தீங்கு விளைவிக்கும் உணவை தவிர்க்கவும். இந்த வாரம் தெய்வீக சிந்தனைகள் மனநிம்மதியை ஏற்படுத்தும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

 

 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

இடத்தை உணர்ந்து அதற்கேற்ப காய்களை நகர்த்தும் வல்லமை கொண்ட, எளிமையை விரும்பும் விருச்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு எதிர்பாராத புதிய நட்பு வட்டம் விரிவடையும். அதனால் உற்சாகம் ஏற்படக்கூடும். அனாவசிய பிரச்சினைகளில் தலையிடுவதால் அது நமக்கே வினையாக அமையும். மேலதிகாரிகளினால் மறைமுக பிரச்சினை ஏற்பட வாய்ப்புண்டு. சுயசிந்தனையோடு செயற்படவும். குடும்பத்தில் பெண்களினால் அதிக சலுகையும் அன்பும் ஏற்படும். வியாபார முன்னேற்றத்தில் தடை ஏற்படும். மனம் தளராமல் விடாமுயற்சியுடன் செயற்படவும். அயல்தேசத்திலிருந்து செய்திகள் கிடைக்கக்கூடும். இந்த வாரம் அதிக ஆன்மீக சிந்தனையுடன், பொறுப்புடன் கையாளவும்.    

அதிர்ஷ்ட திகதி: 17
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்   
வழிபாடு: நவக்கிரகம்

 

 

மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

தலைகுனிவு ஏற்பட்டாலும் மற்றவர்களுக்கு சேவை செய்வதிலும் பொது நலனில் அக்கறை கொண்டவர்களுமான தனசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் விநோதம் சம்பந்தபட்டவைகளில் ஈடுபடும்போது அதிக செலவிடவாய்ப்புண்டு. எனவே சிக்கனத்தை கடைபிடிக்கவும். வியாபாரத்தில் புதிய தொழில் நுட்பங்களை புகுத்தி வாடிக்கையாளர்களை கவர்வீர்கள். இதனால் எதிர்பார்த்த லாபம் கிடைக்க கூடும். குடும்பத்தில் சொந்த பந்தங்களின் வருகையினால் புத்துணர்வும் குதுகலமும் அதிகரிக்கும். புண்ணிய தலங்களுக்கு சென்று வழிபாடுகள் செய்ய வாய்ப்புக்கள் கிடைக்கும். அனாவசிய வாய்வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளவும். உடல் நலத்தை பாதிக்கும் உணவை உட்கொள்ளாது ஆரோக்கியத்தை பாதுகாத்து கொள்ளவும். பயணங்கள் செல்வதால் புதுவித அனுபவமும் அதிர்ஷ்டத்தைத் தேடி தரும்.   

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்  
வழிபாடு: பிரம்மா

 

 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மனசாட்சிக்கு விரோதமாக எதையும் செய்யாத, மனதில் பட்டதை பளிச்சென பேசும்  பழக்கமுடைய மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் தொடக்கத்தில் எதிர்பாராத மகிழ்ச்சியான செய்திகளினால் பூரிப்படைய கூடும். கடின உழைப்பினால் உத்தியோகத்தில் தேங்கிக் கிடந்த வேலைகளை உடனுக்குடன் முடிப்பீர்கள். தோல்விகளை கண்டு மனம்தளராது தன்னம்பிக்கையுடன் செயற்படவும். புதிய திட்டங்கள் வெற்றிப் பாதைக்கு வழிவகுக்கும். உடல் உஷ்ணங்கள் வந்து நீங்கும். பணவிடயங்களில் தாமதத்தை ஏற்படுத்தும். ஆகவே பணம் சம்பாதிப்பதில் ஈடுபாடு செலுத்தவும். பெரியோர்களின் உபதேசமும் அக்கறையும் மனநிம்மதியை தரும். தெய்வீக சிந்தனை சூழ்நிலையை மாற்றும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு தவிர்க்கவும்     
வழிபாடு: பிரம்மா

 

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

மாறுபட்ட குணங்களை கொண்டவர்களிடமும் யதார்தமாக பேசி பிறர் மனதை அடக்கி ஆளும் கும்ப ராசிக்காரர்களே..!

இந்த வாரம் ஆரம்பத்தில் வியாபாரத்தில் புதிய திட்டங்களை முன்னெடுப்பதால் ஒப்பந்தங்கள் தேடி வரும். இதனால் தன்னம்பிக்கை ஏற்படும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அதிக கவனம் செலுத்தவும் அரசினர்களால் சலுகைகள் கிடைக்க வாய்ப்புண்டு. இசைத் துறையில் ஈடுபாடு செலுத்துவதனால் புதுவிழிப்புணர்வு ஏற்படக்கூடும். நீண்ட நாட்களின் பின் நிம்மதியான நித்திரை கிடைக்கும். நல்லவர்களின் சேர்க்கை நன்நெறியை உருவாக்கும். அநாவசிய வாய் வார்த்தைகள் மனக்காயத்தை ஏற்படுத்தக் கூடும். வார்த்தைகளை நிதானத்துடன் பிரயோகிக்கவும். பிறரின் உதவி, வீண் சங்கடத்தை உருவாக்கும். குலதெய்வ வழிபாடு சுபீட்சத்தை தரும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

 

 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி,  ரேவதி முடிய ஆக 9-பாதங்கள்.

கடினமான காரியங்களையும் எளிதாக செய்து முடிக்கும் நீங்கள், பலரையும் நம்பி ஏமார்ந்து  போவீர்கள். ஒரு காலகட்டத்துக்கு பிறகு உங்களை மட்டுமே நம்பும் மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு குடும்பத்தில் பெண்களினால் ஆதாரவும் அன்பும் கிடைக்கும். அதனால் மகிழ்ச்சி. நாவுக்கு சுவையான சாப்பாடு கிடைக்கக்கூடும். எதிர்பார்ப்புக்கள் அவநம்பிக்கையை தரும். ஆகவே தன்னம்பிக்கையுடன் நடக்கவும். அறிமுகமற்ற நட்பினால் மனசஞ்சலங்கள் உருவாகும். தொழிலில் புதிய புதிய திட்டங்களை முன்னேடுப்பதால் அது தோல்வியை தரக்கூடும். நன்மை பயக்கும் காரியங்களை செய்வதற்கு வழிகிடைக்கும். வேண்டாத பேச்சுகளை தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் எடுக்கும் தீர்மானங்களை சுயசிந்தனையுடன் தீர்மானிக்கவும்.

அதிர்ஷ்ட திகதி: 17
அதிஷ்ட நிறம்:  ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .