2021 ஜூன் 18, வெள்ளிக்கிழமை

இந்தவார பலன்கள் (29.08.2010 – 04.09.2010)

A.P.Mathan   / 2010 ஓகஸ்ட் 28 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (29.08.2010 – 04.09.2010)

அஸ்வினி, பரணி, கிருத்திகை 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
சொல்- செயல்களில் தெளிவும் சஞ்சல மனம், பிறகு தெளிவு உடையவர்களான மேட ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு நினைத்த காரியத்தை சாதித்து வெற்றி அடையலாம். மனதளவில் சில அலைச்சல் ஏற்படக் கூடும். கடினமான பேச்சுவார்த்தைக்கு இடமுண்டு, நிதானத்துடன் நடக்கவும். அனாவசிய செலவு ஏற்படக் கூடும். தீய நண்பர்களால் பகை ஏற்படக் கூடும். சில உடல் உபாதைகள் ஏற்பட்டு நீங்கும். உடலுக்கு ஒவ்வாத உணவை தவிர்ப்பது நல்லது. சாதுக்களின் தரிசனம் கிடைக்கும். அதன் மூலம் மனம் அமைதி பெறும். இந்த வாரத்தில் மிக அவதானத்துடன் நடக்கவும்.
அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
வழிபாடு: நவக்கிரகம்


கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தமது வாக்கு சாதுர்யத்தாலும் இனிய சுபாவத்தினாலும் சாதனங்களை பெற்றுக்கொள்ளும் இடப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும், அதனால் எதிர்பார்த்தபடி பணவரவு கூடும். சில புதிய ஆடை- ஆபரணங்கள் கிடைக்கக் கூடும். குடும்பத்தில் உறவினர்கள், நண்பர்கள் வருகையால் குதூகலம் ஏற்படும். நல்ல சுவையான ஆகாரம் கிடைக்கும். சிலவேளையில் மன சங்கடம், சஞ்சலம் ஏற்பட்டு நீங்கும். அரசாங்க ஊழியர்கள் மூலம் உதவி, சேவை கிடைக்க வாய்ப்புண்டு. முயற்சியால் தோல்வி ஏற்படக் கூடும். நிதானத்துடன் நடக்கவும். நீண்ட நாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி


மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9 பாதங்கள்.
தீவிரமோ தொய்வோ இல்லாத மிதமான போக்குடையவர்கள், மென்மையான குணம் படைத்த மிதுன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு சிலவிதமான சிக்கல்கள், குழப்பம், வேண்டாத பேச்சால் மனஸ்தாபம் ஏற்பட்டு நீங்கும். இந்தக் காலகட்டத்தில் அவதானத்துடன் நடக்கவும். பெண்களுடன் விவாதம் ஏற்படக் கூடும். வியாபரத்தில் நஷ்டம், பிரச்சினை ஏற்படக் கூடும். இசை துறையில் ஆர்வம் அதிகரிக்கும். வெளி பிரயாணத்தின் மூலம் லாபம் கிடைக்கும். இடம் அல்லது தொழில் மாற்றத்திற்கு இடமுண்டு. பிரார்த்தனைகளில் அதிகம் ஈடுபடுதல் நல்லது.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்  

 

புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.
பிடிவாதமான குணமும் சாதுர்யமும் தைரியமும் அனைவரிடமும் அன்பு கொண்ட கடகராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் நல்ல காரியங்களை தொடங்கலாம். குடும்பத்தில் உறவினர்கள் வருகையில் இன்பம் ஏற்படும். பணம் சம்பாதிப்பதில் அதிக ஊக்கம் எடுக்க வேண்டும். பிறர் உதவியை நாடவேண்டிய சூழ்நிலை ஏற்படும். அவதானத்துடன் நடக்கவும். தொழில் ஸ்தானத்தில் உயர் அதிகாரிகளுடன் பகை ஏற்படக் கூடும், நிதானம் தேவை. உணவில் வெறுப்பு ஏற்படக் கூடும், அதனால் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். இசையில் ஈடுபாடு கூடும். புதிய ஆடை- ஆபரணங்கள் சேரும். பெண்கள் மூலம் உதவி கிடைக்கும், அதனால் இன்பம்.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி

 

மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
வாக்கு சாதுர்யம், மனோபலம் உள்ளவர்கள். சற்று அகம்பாவம் உள்ளவர்கள். அதிகார தன்மை உடைய சிம்ம ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தூரதேசத்திலிருந்து நல்ல செய்தி கிடைக்கும். புதிய நண்பர்கள் நட்பு கிடைக்கும். உடல் நலிவு, மனதால் குழப்பம், துக்கம் ஏற்படக்கூடும். கடினமான பேச்சுவார்த்தைக்கு வாய்ப்புண்டு. வார்த்தைகளை பிரயோகிப்பதில் நிதானம் தேவை. முயற்சியால் தோல்வி ஏற்படக்கூடும். வேண்டாத செலவுகள் ஏற்படும். அரசாங்க ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்கக் கூடும். தீய சகவாசத்தால் நஷ்டம் ஏற்படக்கூடும். நமது வாழ்க்கையில் முன்னுதாரணமாக இருக்கக் கூடிய பெரியோர்களை கண்டு ஆசிர்வாதத்தை பெற்றுகொள்ள வாய்ப்பு கிட்டும்.
அதிர்ஷ்ட திகதி: 2
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் சாம்பல்
வழிபாடு: சிவன் (சந்திரன்)

 

உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
நீதி தவறாமை, கண்ணியம், நேர்மை, கனிவான உள்ளம், சுபாவத்தில் கலகலப்பான கன்னி ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு இசை துறையில் நாட்டம் அதிகரிக்கும். வெளிபிரயாணங்கள் மூலம் லாபம் கிடைக்க வாய்ப்புண்டு. பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது அவதானத்துடன் நடக்கவும். சுற்றத்தினர், நண்பர்கள் வருகையால்  இன்பம் ஏற்படும். வியாபாரத்தில் முன்னேற்றம் கூடும், அதனால் எதிர்பார்த்தபடி பணவரவு கூடும். தொலைந்த பொருள் கிடைக்க கூடும். வீண் சிரமம், மயக்கம் ஏற்படக்கூடும். இடம் அல்லது தொழில் மாற்றத்துக்கு இடமுண்டு.
அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்  
வழிபாடு: பிரம்மா

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 29ஆம் திகதி காலை 08.00 மணியிலிருந்து ஓகஸ்ட் 31ஆம் திகதி மாலை 06.15 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள் புதிய தொழில் தொடங்குதல் வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 

சித்திரை 3, 4, சுவாதி, விசாகம் 1, 2, 3ஆம் பாதங்கள்.
எவரையும் எதையும் ஒருமுறை பார்த்ததுமே துல்லியமாக எடைபோடக்கூடியவர்கள், ஆடம்பரமான வாழ்க்கை உள்ள துலா ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு முயற்சி செய்த காரியத்தில் வெற்றி கிடைக்கும். உடலுக்கு ஒவ்வாத உணவை தவிர்க்கவும். தொழில் ஸ்தானத்தில் உயர் அதிகாரிகள் மற்றும் சக ஊழியர்களுடன் பகை ஏற்பட வாய்ப்புண்டு, நிதானத்துடன் நடக்கவும். திருட்டு ஏற்பட வாய்ப்புண்டு, மிக கவனம் தேவை. வீண் செலவு, வீண் அலைச்சல் ஏற்படக்கூடும். பெண்களுடன் விவாதம் ஏற்படக் கூடும். வார்த்தையில் நிதானம் தேவை. புதிய ஆடை- ஆபரணங்கள் சேரும். மகான்களின் தரிசனம் கிடைக்கக் கூடும், அதனால் மனநிம்மதி ஏற்படும்.
அதிர்ஷ்ட திகதி: 31
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்  
வழிபாடு: பிரம்மா

சந்திராஷ்டமம்
ஓகஸ்ட் 31ஆம் திகதி மாலை 06.15 மணியிலிருந்து செப்டெம்பர் 2ஆம் திகதி காலை 01.30 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 

விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.
ஆர்வத்துடன் சாதனைகள் படைக்கும் குணமுடயவர்களே, எடுத்த காரியத்தை முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்ற விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு உற்சாகத்துடன் நல்ல காரியங்களை தொடங்கலாம். எதிர்பார்த்தபடி பண வரவு கூடும். நிம்மதியான உறக்கம் கிடைக்கும். பிறர் உதவியை நாட வேண்டிய நிலை ஏற்படும். வீண் மனஸ்தாபம், உஷ்ணம் ஏற்படக் கூடும். ஆரோக்கியத்தில் அவதானம் தேவை, மனதுக்கு பயம் ஏற்படக் கூடும். இசையில் ஆர்வம், பெண்களால் மகிழ்ச்சி ஏற்படும். அறுசுவை உணவு உண்ணுதல், வியாபாரத்தில் பிரச்சினை ஏற்படக் கூடும். செய்யும் செயல்களில் அவதானத்துடன் இருக்கவும்.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: சிவன் (சூரியன்)

 

சந்திராஷ்டமம்

செப்டெம்பர் 2ஆம் திகதி காலை 01.30 மணியிலிருந்து செப்டெம்பர் 4ஆம் திகதி காலை 05.07 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக  நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய முயற்சிகள், புதிய தொழில் தொடங்குதல், வேண்டாத பிரச்சினையில் ஈடுபடுவது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.
குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்ய வேண்டும்.
 

மூலம், பூராடம், உத்திராடம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.
வைராக்கியம், திடசிந்தனை, நேர்மை, நல்லொழுக்கம் உடைய  தனுசு ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு தூரதேசத்திலிருந்து எதிர்பார்த்த நல்ல செய்தி கேள்விப்படுவீர்கள். குடும்பத்தில் பெண்கள் மூலம் உதவி கிடைக்கும். அதன் மூலம் இன்பம் ஏற்படும். விசித்திரமான, ஆச்சரியமான பொருள்களை காணக் கிடைத்தல். வீண் சிரமம், மயக்கம், மனம் சஞ்சலம் ஏற்படக் கூடும். உணவில் விருப்பமின்மை ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் அக்கறை எடுப்பது நல்லது. தனலாபம். அரசாங்க ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்கும். மகான்களின் தரிசனம் கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி

 

உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
தெய்வீக பலன் பெற்றவர்களே, நினைத்ததை சாதிக்கும் வல்லமை படைத்த மகர ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு இசை துறையில் ஈர்ப்பு அதிகரிக்கும். வியாபாரத்தில் முன்னேற்றம் அதனால் பணவரவு கூடும். இடம் அல்லது தொழில் மாற்றத்துக்கு வழி உண்டு. அறுசுவையான உணவு கிடைத்தல், பொழுதுபோக்கு சம்மந்தப்பட்டவைக்கு செலவு செய்ய நேரிடும். குடும்பத்தில் உறவினர் வருகையால் மகிழ்ச்சி ஏற்படும். புதிய ஆடை -ஆபரணங்கள் சேரும். சில குழப்பம், துன்பம் ஏற்பட்டு நீங்கும். அரச ஊழியர்கள் மூலம் உதவி கிடைக்கும். தொடங்கிய காரியத்தில் வெற்றி கிடைக்கும்.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு  
வழிபாடு: பார்வதி

 

அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.
ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம், செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வெளி பிரயாணத்தால் லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய வழி கிடைக்கும். மனதால் கஷ்டம், குழப்பம் ஏற்பட்டு நீங்கும். எதிர்பார்த்தபடி பணவரவு கிடைக்கும். சாப்பாட்டில் வெறுப்பு, இதனால் உடல் நலம் பாதிப்பு ஏற்படும். ஆரோக்கியத்தில் அவதானம் தேவை. தொலைந்த பொருட்களை மீண்டும் பெற்றுகொள்ளக் கூடும். கடினமான பேச்சுவார்த்தைக்கு இடமுண்டு, வார்த்தை பிரயோகிப்பதில் அவதானம் தேவை. வேண்டாத செலவு ஏற்பட கூடும். நீண்ட நாள் பிரார்த்தனையின் பலனாக மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெறவாய்ப்பு கிடைத்தல்.
அதிர்ஷ்ட திகதி: 4
அதிர்ஷ்ட நிறம்: சாம்பல் நிறம், நீலம்
வழிபாடு: நவக்கிரகம்

 

பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.
காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப் பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!

இந்த வாரம் உங்களுக்கு வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பணவரவு கூடும். குடும்பத்தில் உறவினர்கள் அன்யோன்யம், மகிழ்ச்சி மற்றும் இன்பமான உறக்கம் கிடைக்கும். அரசாங்க தொழில் கிடைக்க வாய்ப்புண்டு. இசை துறையில் நாட்டம் அதிகரிக்கும். வீடு அல்லது தொழில் ஸ்தானத்தில் மாற்றம் ஏற்பட இடமுண்டு. புதிய ஆடை- ஆபரணங்கள் சேரும். சில சிக்கல்கள், மனஸ்தாபம் ஏற்படக்கூடும், நிதானம் தேவை. காய்ச்சல், தலைவலி ஏற்படக் கூடும். உடல் ஆரோக்கியத்தில் அவதானம் தேவை. வாழ்க்கையில் முன் உதாரணமாக இருக்க கூடிய பெரியோர்களை கண்டு ஆசிர்வாதத்தை பெற்றுகொள்ள வாய்ப்பு கிட்டும்.
அதிர்ஷ்ட திகதி: 1
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .