2021 ஓகஸ்ட் 04, புதன்கிழமை

உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்ப வேண்டாம்

Princiya Dixci   / 2016 டிசெம்பர் 22 , மு.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

உங்களுக்குப் பதிலாக வேறு ஒருவரை அனுப்ப வேண்டாம். சாதாரணமாகக் கிடைக்க வேண்டிய அனுகூலங்கள் கூட உங்களுக்குக் கிடைக்காமல் போகலாம்.  

சோம்பலை விடுத்து எமது பணியை நாங்களே முடிப்போமாக. எமது வேலை பற்றிப் பூரணமாக நாங்களே தெரிந்து வைத்திருக்கும்போது, ஏனையவர்கள் அதனைப் புரியாமல், உங்கள் சார்பில், கருமமாற்றும்போது, ஏற்படும் பாதிப்பு உங்களுக்கேயானது. உங்களால் அனுப்பிவைக்கப்பட்டவர்களுக்கு அல்ல. 

மிகப்பெரிய கருமங்களை நீங்கள் பிறர் உதவியுடன் செய்ய முற்படும்போது, அடிக்கடி சம்பந்தப்பட்ட நபர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கருமங்களைச் சரியாக நெறிப்படுத்துவீர்களாக. 

எந்தக் கருமங்களையும் செய்வதற்கு முற்படும்போது, இதனை நூற்றுக்கு நூறு சதவீதம் சரியாக நிறைவேற்றுவேன், எனத் திடசங்கல்பம் கொள்க. உங்கள் கருமங்களுக்குப் பிறர்மீது பாரம் சுமத்த வேண்டாம்.  

வாழ்வியல் தரிசனம் 22/12/2016

பருத்தியூர் பால – வயிரவநாதன்


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .