2025 ஜூலை 03, வியாழக்கிழமை

இந்தவார பலன்கள் (09.01.2011 - 15.01.2011)

A.P.Mathan   / 2011 ஜனவரி 08 , பி.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

இந்தவார பலன்கள் (09.01.2011 - 15.01.2011)


அஸ்வினி, பரணி, கிருத்திகை 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

உறுதியான உள்ளமும் சிந்தனையாற்றல் அதிகமும் கொண்ட மேட ராசி அன்பர்களே...!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் சுபகாரியங்கள் நடைபெறும், மேலும் பெண்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சி தரக்கூடும். புதிய ஆடை, ஆபரணங்கள் பரிசாக கிடைக்கும். சேமிப்பைவிட செலவுகள் அதிகரிக்கும். வியாபார விரித்திக்கு அரசாங்க உதவிகள் கிடைக்கக்கூடும். நீண்ட நாள் நண்பர்களின் சந்திப்பு கிடைக்கும். சில இடமாற்றங்களுக்கு இடமுண்டு. திருட்டுகள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானத்துடன் செயல்படவும். நிம்மதியான தூக்கம் இனிதே கிடைக்கும். இக்காலகட்டங்களில் தீயவர்களின் சகவாசங்களை தவிர்த்து நன்மையானதை மட்டும் சிந்தித்து செயல்படுவதால் துன்பங்கள் விலகும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




கிருத்திகை 2, 3, 4, ரோகிணி, மிருகசீரிடம் 1-2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கவர்ச்சியான பார்வையும் எதிலும் விட்டுகொடுத்து செயல்படும் இடப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு தொழிலில் நவீன தொடர்புகளை கையாண்டு ஆதாயம் அடையலாம். புண்ணிய ஸ்தலங்கள் சென்று வழிபாடுகளில் ஈடுபடுவதனால் மனஅமைதி கிடைக்கும். பெண்களுடன் அதிக பேச்சுகள் மனஸ்தாபத்தை ஏற்படுத்தும், வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். சுவையான உணவு உண்ணலாம். பொழுதுபோக்குகளுக்காக அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள், பகைவர்களினால் சில சிக்கல்கள் தேடி வரக்கூடும், பொறுமையுடன் செயல்படவும். இசையில் ஈர்ப்பு அதிகரிக்கும். இக்காலகட்டங்களில் ஆன்மீக யாத்திரிகைகள் செல்ல வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கருப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா




மிருகசீரிடம் 2, 3, திருவாதிரை, புனர்பூசம் 1, 2, 3-ஆம் பாதங்கள் ஆக 9 பாதங்கள்.

எந்த விடயத்தையும் தீவிரமாக ஆராய்ந்து நற்பெயரை பெற்றுக்கொள்ளும் மிதுனம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு நண்பர்களுடன் வெளிப்பிரயாணங்களை மேற்கொள்வீர்கள். பணப்பிரச்சினைகள் அதிக அலைச்சலை ஏற்படுத்தக்கூடும். கடின உழைப்புடன் செயல்படுவது அவசியம். வியாபாரத்தில் புதிய சாதனங்களின் அறிமுகம் லாபகரமான அமையும். சிலருக்கு அரசாங்க வேலைவாய்ப்பு கிடைக்க கூடும். ஒவ்வாத உணவினால் உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும், இதனால் மருத்துவ செலவுகள் அதிகரிக்க கூடும். குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகையினால் மனதில் சோர்வுகள் நீங்கி உற்சாகம் கிடைக்கும். தூய்மையான ஆடைகளை அணியலாம், இக்காலகட்டங்களில் குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி




புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம் முடிய ஆக 9- பாதங்கள்.

எதையும் எளிதில் சாதிக்க முடியும் என்ற மனவலிமையும் அதிக விழிப்புணர்வும் கொண்ட கடக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் நீங்கள் பெண்களுடன் அனுசரித்து நடப்பது நன்மை தரும். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. நிம்மதியான தூக்கம் கிடைக்கும். குடும்பத்தில் சொந்தபந்தங்களின் அன்யோன்யம் பலப்படும். எதிர்பார்த்த பணவரவுகள் உரிய நேரத்தில் வந்துசேரும். தீயவர்களின் சகவாசங்களினால் தேவையற்ற பிரச்சினைகளை எதிர்நோக்க நேரிடும். வியாபாரத்தில் உயர் அதிகாரிகளுடன் சுமுகமாக செயல்படவும். மாணவர்களுக்கு கல்வியில் அத்தியாவசிய செலவுகள் ஏற்படக்கூடும். மனதில் சிறு சலனங்கள் தோன்றி மறையும். இக்காலகட்டங்களில் விடாமுயற்சியுடன் செயல்படுவதால் மட்டுமே முன்னேற்றம் அடையலாம்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா

சந்திராஷ்டமம்:
ஜனவரி 07ஆம் திகதி மாலை 8.16 மணியிலிருந்து ஜனவரி 10ஆம் திகதி காலை 8.30 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைப்படுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



மகம், பூரம், உத்திரம் 1ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

பிறரை அடக்கியாளும் நிமிர்ந்த நெஞ்சமும் அதிக பிடிவாத குணமும் படைத்த சிம்ம ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுடைய அன்றாட வேலைப் பணிகளை உற்சாகத்துடன் தொடங்கலாம். தூரபிரயாணங்கள் பயணிப்பதால் அனுகூலம். அழகிய, ஆச்சரியமான பொருள் காணக்கிடைக்கும். வியாபார உத்தியோகத்தர்கள் தமது ஆற்றலால் உயர் சலுகை அடைவார்கள். குடும்ப உறவினர்கள் மூலம் புதிய ஆடை, உபகரணங்கள் பரிசாக கிடைக்கக்கூடும். மேலும் பெண்களின் அனுசரணை மகிழ்ச்சியை தரும். பொழுதுபோக்குகளில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. பணபிரச்சினை மனசங்கடத்தை ஏற்படுத்தும். பணம் சம்பாதிப்பதில் கடின உழைப்பு தேவை. இக்காலகட்டங்களில் தேடிவரும் பிரச்சினைகளை பொறுமையுடன் கையாளுவதன் மூலம் சிக்கல்கள் தீரும், சிரமங்கள் மறையும்.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி

சந்திராஷ்டமம்:
ஜனவரி 10ஆம் திகதி காலை 8.30 மணியிலிருந்து ஜனவரி 12ஆம் திகதி மாலை 8.57 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



உத்திரம் 2, 3, 4, அஸ்தம், சித்திரை 1, 2ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

கடமையில் கண்ணாயிருக்கும் எளிமையான தோற்றமும் கனிவான உள்ளமும் கொண்ட கன்னி ராசி அன்பர்களே..!

இந்தவார உங்களுக்கு மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கக்கூடும். விநோத விளையாட்டுகளுக்கு அதிக செலவுகளை மேற்கொள்வீர்கள். இசையில் நாட்டம் அதிகரிக்க கூடும். தொழில் ஸ்தானத்தில் சில இடமாற்றங்கள் லாபகரமாக இருக்கும். உண்ணும் உணவில் விருப்பமின்மை ஏற்படுவதால்; உடல் ஆரோக்கியம் பாதிப்படையும். நண்பர்கள் மூலம் இன்பகரமான செய்திகள் வந்து சேரும். குடும்பத்தில் சகோதர சகோதரிகள் விட்டுக்கொடுத்து செயல்படுவார்கள். மனதால் சிறு அலைச்சல்கள் தோன்றும். தொலைந்த பொருள் கிடைக்கக்கூடும். இக்காலகட்டங்களில் இறைவனை நம்பிக்கையோடு தரிசித்து வழிபட்டுவர மனதில் உள்ள குழப்பங்கள் தெளிவுபெறும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
ஜனவரி 12ஆம் திகதி மாலை 8.57 மணியிலிருந்து ஜனவரி 15ஆம் திகதி காலை 7.23 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



சித்திரை 3, 4 சுவாதி, விசாகம் 1, 2, 3-ஆம் பாதங்கள்.

இறைவன் காட்டும் வழியை வாழ்வில் துணையாக கொண்டு பிறரை மதித்து செயல்படும் துலாம் ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு குடும்பத்தில் உற்றார் உறவினர்களின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். நன்மை பயக்கும் காரியங்களில் அதிக நாட்டம் காட்டுவீர்கள். வரவுக்கு மீறிய செலவுகள் ஏற்படும். வியாபாரத்தில் நவீன தொடர்புகள் கிடைக்க கூடும். மாணவர்கள் கல்வியில் புதிய சாதனைகளை வெளிபடுத்த சந்தர்ப்பம் கிடைக்கும். திடீர் அதிர்ஷ்டங்கள் மூலம் சொத்துக்கள் சேரும். அரசாங்க ஊழியர்களில் உதவி, சேவைகள் கிடைக்க கூடும். நண்பர்களுடன் உல்லாச பிரயாணங்களை உற்சாகத்துடன் மேற்கொள்ளலாம். இக்காலகட்டங்களில் நீண்ட நாள் பயனாக மகான்களை தரிசித்து ஆசீர்வாதம் பெற வாய்ப்பு கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 15
அதிர்ஷ்ட நிறம்: வெள்ளை, இளம் மஞ்சள்
வழிபாடு: பெருமாள்

சந்திராஷ்டமம்:
ஜனவரி 15ஆம் திகதி காலை 7.23 மணியிலிருந்து ஜனவரி 17ஆம் திகதி மாலை 2.14 மணிவரை இருப்பதால் இந்த காலகட்டத்தில் புதிதாக நண்பர் அல்லது உறவினர் வீட்டில் விருந்து உண்ணுதல், புதிய காரியங்களை நடைமுறைபடுத்தல், புதிய தொழில் தொடங்குதல், பிறரின் பிரச்சினைகளில் முன்னிற்பது போன்றவைகளை கண்டிப்பாக தவிர்க்கவும்.

குறிப்பு: இந்த வாரத்தில் சந்திரனை வணங்கி அர்ச்சனை செய்து வழிபடுவது அவசியம்.



விசாகம் 4, அனுசம், கேட்டை முடிய ஆக 9- பாதங்கள்.

மற்றவர்களுக்கு அறிவுரை வழங்க கூடிய பக்குவமும் தன்னடக்கம் அதிகம் கொண்ட விருட்சிக ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கும் நீண்டநாள் எதிர்பார்த்த நண்பர்களின் சந்திப்புக்கள் கிடைக்கும். நாவுக்கு சுவையான உணவு உண்ணலாம். வியாபாரத்தில் மேல் அதிகாரிகளினால் சில பிரச்சினைகள் ஏற்படக்கூடும், பொறுமை அதிகம் தேவை. தூய்மையான ஆடைகளை அணியலாம். ஆச்சரியமான பொருள் காணக்கிடைத்தல், சிலருக்கு உஷ்ண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். ஒவ்வாத உணவுகளை தவிர்ப்பது நல்லது. பணநெருக்கடிகள் ஏற்படக்கூடும், பணம் சேமிப்பதில் அதிக அக்கறை செலுத்தவும். பொருள் திருட்டுக்கள் ஏற்பட வாய்ப்புண்டு, அவதானத்துடன் செயல்படவும். நிம்மதியான தூக்கம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் புண்ணிய காரியங்களில் ஈடுபடுவதனால் மனஅமைதி கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: சாம்பால், நீலம்
வழிபாடு: நவகிரகம்




மூலம், பூராடம், உத்திராடம் 1-ஆம் பாதம் ஆக 9- பாதங்கள்.

அமைதியான முகத்தோடு பிறரின் மனதை புரிந்து செயல்படும் கள்ளமில்லா உள்ளம் பெற்ற தனுசு ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு அயல் தேசங்களிருந்து இன்பகரமான செய்திகள் வந்து சேரும்.  தூரபிரயாணங்கள் செல்வதன் மூலம் நெருங்கிய நண்பர்களின் சந்திப்புக்கள் கிடைக்கக்கூடும். இசையில் அதிக நேரத்தை செலவிடுவீர்கள். தொழில் தொடர்பான திட்டங்களுக்கு அரச ஊழியர்களின் ஒத்துழைப்புக்கள் கிடைக்கும். பொருள் வரவு சேரும். புதிய காரியங்களை முடிப்பதற்கு அதிக அலைச்சல்களை மேற்கொள்ள வேண்டிருக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் கிடைக்கும். பொழுதுபோக்களில் ஈடுபடும்போது மிக கவனம் தேவை. குடும்பத்தில் உறவினர்களின் ஆதரவு நம்பிக்கை தரும். இக்காலகட்டங்களில் தியானங்கள், வழிபாடுகள் மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் தரும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா




உத்திராடம் 2, 3, 4, திருவோணம், அவிட்டம் 1, 2-ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

தோல்விகளை கண்டு தளர்ந்துபோகாமல் எதிலும் வெற்றி நடைபோடவேண்டும் என்ற கொள்கை உள்ள மகர ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு கடின முயற்சியுடன் செயல்பட்டு காரியங்களை சாதிக்கலாம். அழகிய ஆடை, ஆபரணங்கள் அன்பளிப்பாக கிடைக்கக்கூடும். குடும்பத்தாருடன் சுற்றுலா பயணங்கள் செல்ல சந்தர்ப்பம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய நுட்பங்களை கையாண்டு வாடிக்கையாளர்களை கவர்வீர்கள், இதனால் அதிக பணவரவு ஏற்படும். ஆரோக்கியமற்ற உணவினால் அஜீரண சம்பந்தமான உபாதைகள் ஏற்படும். பகைவர்களுடன் கருத்து வேற்றுமைகள் ஏற்படக்கூடும், நாவடக்கம் அவசியம். நண்பர்களின் உதவிகள் கிடைக்கும். குடும்பத்தில் பெண்களின் அனுசரிப்புக்கள் அதிகரிக்க கூடும். இக்காலகட்டங்களில் விநோதங்கள் விபரிதங்களை ஏற்படாத வண்ணம் செயல்படவும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: கறுப்பு நிறத்தை தவிர்க்கவும்
வழிபாடு: பிரம்மா




அவிட்டம் 3, 4, சதயம், பூரட்டாதி 1, 2, 3ஆம் பாதங்கள் ஆக 9- பாதங்கள்.

ஆடம்பரம் இன்றி நடப்பவர்களே, புத்திரர்களால் அதிக அளவில் அதிர்ஷ்டம், செல்வாக்கு பெற்ற கும்ப ராசி அன்பர்களே..!

இந்தவாரம் உங்களுக்கு பெரியார்களின் ஆலோசனைகள் நம்பிக்கையும் வழிநடத்தலையும் ஏற்படுத்தும். புதிய நண்பர்களின் அறிமுகம் கிடைக்கக்கூடும். வியாபாரத்தில் வளர்சிக்கு அரச ஊழியர்களின் உதவிகள் கிடைக்கும். சில இடமாற்றங்கள் ஏற்படக்கூடும். அதிகாரிகளுடன் வாக்குவாதங்களுக்கு இடமுண்டு. வார்த்தைகளை நிதானமாக பிரயோகிக்கவும். குடும்பத்தில் நலன்விரும்பிகளின் வருகை குதூகலத்தை ஏற்படுத்தும். பெண்களின் பணிவிடைகள் அதிகரிக்க கூடும். அநாவசிய ஆடம்பர செலவுகளை தவிர்த்து பணம் சேமிப்பதில் அதிக ஊக்கம் செலுத்தவும். இக்காலகட்டங்களில் வாழ்வில் துன்பங்கள் மறைந்து நிம்மதியான தூக்கமும் கிடைக்கும்.

அதிர்ஷ்ட திகதி: 14
அதிர்ஷ்ட நிறம்: பச்சை, மஞ்சள்
வழிபாடு: பெருமாள்




பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி முடிய ஆக 9- பாதங்கள்.

காரியத்தில் மனத்தெளிவு உள்ளவர்கள், யாரிடமும் மனம் விட்டுப்பழக விருப்பமில்லாத மீன ராசி அன்பர்களே..!

இந்தவாரம் தீய நண்பர்களின் சகவாசங்களிருந்து விலகி செயல்படவும். பெண்களுடன் மனஸ்தாபம் ஏற்படக்கூடும். தூய்மையான ஆடைகளை அணியலாம். காணாமல்போன பொருள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு. பிறருக்கு நன்மை பயக்கு காரியங்களை மகிழ்ச்சியுடன் மேற்கொள்வீர்கள். தொழில் ஸ்தானத்தில் மறைமுக போட்டிகள் நஷ்டத்தை ஏற்படுத்தும். சிலருக்கு சாப்பாட்டில் விருப்பமில்லாத தன்மையினால் உடல் சோர்வுகள் ஏற்படும், ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்தவும். அலைச்சல்கள் சற்று அதிகரிக்கக்கூடும். குலதெய்வ வழிபாடுகளில் ஈடுபட சந்தர்ப்பம் கிடைக்கும். இக்காலகட்டங்களில் புதிய வேலைதிட்டங்களை தவிர்ப்பது நன்மைக்கே.

அதிர்ஷ்ட திகதி: 09
அதிர்ஷ்ட நிறம்: ஒரேஞ், சிவப்பு
வழிபாடு: பார்வதி


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .