2025 ஒக்டோபர் 15, புதன்கிழமை

சற்சொரூபவதி நாதன் காலமானார்

Thipaan   / 2017 மே 04 , மு.ப. 10:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தின் சிரேஷ்ட அறிவிப்பாளர் சற்சொரூபவதி நாதன், தனது 80ஆவது வயதில், இன்று (04) காலமானார்.

ஆரம்பக் கல்வியை யாழ். இந்து மகளிர் கல்லூரியில் பயின்ற அவர், கொழும்புப் பல்கலைக்கழகத்தில் ஒலிபரப்புத் துறையில் பகுதி நேர விரிவுரையாளராகவும் பணியாற்றியுள்ளார்.

1965ஆம் ஆண்டு ஒலிபரப்புக் கூட்டுத் தாபனத்தில் இணைந்த அவர், 1979இல் முதற்தர செய்தி வாசிப்பாளரானார்.

பல வானொலி நாடகங்களிலும் நடித்த அவர், சிறந்த அறிவிப்பாளருக்கான ஜனாதிபதி விருதை 1995ஆம் ஆண்டு பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .