2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

'கசினோ ரோயல்' திரைப்படத்தில் நடிகர் கிரெய்க்கினால் பயன்படுத்தப்பட்ட உள்ளாடை 9,201,850 ரூபாவிற்கு விற

Kogilavani   / 2012 ஒக்டோபர் 07 , மு.ப. 08:18 - 0     - {{hitsCtrl.values.hits}}


கசினோ ரோயல் திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகர் டேனியல் கிரெய்கினால் அணியப்பட்ட நீல நிற உள்ளாடை 9,201,850 (44,500 பவுண்கள்) விற்பனை செய்யப்பட்டுள்ளதுடன் ஜேம்ஸ் பான்ட் திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட 2008 ஆஸ்டொன் மார்ட்டின் 6 லிட்டர் V12 DBS காரானது 49,886,400 இலங்கை ரூபா (241,250 பவுண்கள்) விற்பனை செய்யப்பட்டுள்ளதாக கிரிஸ்டி இல்லம் அறிவித்துள்ளது.

ஜேம்ஸ் பான்ட் திரைப்படத்தின் 50 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு அத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பொருட்களை ஏலத்திலும் விடும் நிகழ்வு பிரிட்டனில் உள்ள கலை, நுண்கலை மற்றும் வணிக பொருட்களை ஏலம் விடும் கிரஸ்டி இல்லத்தில் நடைபெற்றுள்ளது.

இதன்போது இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட பல்வேறு பெருட்கள் எதிர்பார்த்திருந்த ஏல தொகையைவிட பல மடங்கு அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இத்திரைப்படத்தில் பயன்படுத்தப்பட்ட இரண்டாவது, மிக முக்கியமான பொருளான ஒமேகா கடிகாரம் 32,464,900 (157,000 பவுண்கள்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

உலோகத்தால் வடிவமைக்கப்பட்ட இக்கடிகாரமானது எதிர்வரும் 26 ஆம் திகதி வெளியாகவுள்ள 'ஸ்கை போல்' திரைப்படத்தில் புகழ்பெற்ற நடிகர் கிரெய்கினால் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இக்கடிகாரம், இலங்கை ரூபாபடி 1,654,260 இற்கு (8,000 பவுண்கள்) விற்பனையாகும் என எதிர்பார்க்கப்பட்டிருந்த வேலை அதை விட அதிகமாக 32,464,900 ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும், எதிர்வரும் 26 அல்லது 22 ஆம் திகதிகளில் வெளிவரவுள்ள ஸ்கைபோல் திரைப்படத்தின் கிரெக்கினால் அணியப்பட்ட கடற்படை வீரருக்கான கம்பளியாலான ஆடையும் 9,687,790 ரூபாவிற்கு (46,850 பவுண்கள்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இதே திரைப்படத்தில் பிரிட்டன் பாடகி எடெலுடன் சேர்ந்து பாடிய பாடகர் பொண்ட் ரொகர் மூர், கையெழுத்திட்ட சுரவரிசை மதிப்பீடு அட்டையானது 2,853,610 ரூபாவிற்கு (13,800 பவுண்கள்) விற்பனை செய்யப்பட்டுள்ளது.

இவ் ஏல விற்பனையில் கிடைக்கப்பெற்ற மொத்த நிதியானது பல்வேறு தொண்டு நிறுவனங்களுக்கு வழங்கப்படவுள்ளன.  



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .