2025 செப்டெம்பர் 15, திங்கட்கிழமை

சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிரான விக்கிலீக்ஸ் ஸ்தாபகரின் மனு நிராகரிப்பு

Super User   / 2011 நவம்பர் 02 , மு.ப. 10:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

விக்கிலீக்ஸ் இணையத்தளத்தின் ஸ்தாபகர் ஜூலியன் அசேஞ், பாலியல் வல்லுறவு வழக்கிற்காக பிரிட்டனிலிருந்து சுவீடனுக்கு நாடுகடத்தப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்த மனுவை லண்டன் உயர் நீதிமன்றம் இன்று நிராகரித்துள்ளது.

அவுஸ்திரேலிய பிரஜையான ஜுலியன் அசேஞ்சுக்கு (40) எதிராக சுவீடனைச் சேர்ந்த பெண்கள் இருவர் சுமத்திய பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டுக்காக அவர் நாடுகடத்தப்பட வேண்டுமென சுவீடன் அதிகாரிகள் கோரியிருந்தனர்.

இன்றைய தீர்ப்பின்படி, இதனால் 10 தினங்களுக்குள் அவர் சுவீடனுக்கு நாடுகடத்தப்படும் நிலையை எதிர்நோக்குகிறார்.

எனினும் இது தொடர்பாக மேன்முறையீடு செய்வதற்கு அவருக்கு 14 நாள் அவகாசம் உள்ளது. இதில் வெற்றிபெற்றால் அவர் விசாரணையொன்று நடைபெறும் வரை அவர் பிரிட்டனில் நிபந்தனையுடனான பிணையில் தங்கியிருக்க முடியும்.

ஜூலியன் அசேஞ் ஸ்தாபித்த விக்கிலீக்ஸ் இணயைத்தளம் அமெரிக்கா உட்பட பல நாடுகளின் இரகசிய தகவல்கள் பலவற்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .