2025 செப்டெம்பர் 02, செவ்வாய்க்கிழமை

நடிகர் லூஸ் மோகன் மரணம்

Kogilavani   / 2012 செப்டெம்பர் 16 , மு.ப. 08:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

நகைச்சுவையில் தனக்கென தனி பாணியில் நடித்து லட்சக்கணக்கான மக்களின் மனதில் நீங்காத இடத்தை பெற்ற பிரபல நடிகர் லூஸ் மோகன் உடல் நலக்குறைவால் மரணமடைந்துள்ளார்.

ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளவரான மோகன், மெட்ராஸ் பாஷை எனப்படும் சென்னைத் தமிழில் தனி பாணியில் நடித்து ரசிகர்களைக் கவர்ந்தவராவார்.

இவர் தனது கடைசிக்காலத்தில் பெரும் மன உளைச்சலுடன் வாழ்ந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

தமிழ்த் திரையுலகின் முன்னணிக் கதாநாயகர்களோடு இணைந்து ஒரு காலத்தில் நகைச்சுவை பாத்திரத்தில் சிறப்பாக நடித்துள்ளார் லூஸ் மோகன். அவரது நகைச்சுவைக்கு என்றே தனி ரசிகர் கூட்டம் உண்டு. இவர் எம்.ஜி.ஆர். காலத்திலிருந்து நடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

லூஸ் மோகனின் மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். (தட்ஸ்தமிழ்)

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X