Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Ilango Bharathy / 2021 ஓகஸ்ட் 29 , பி.ப. 04:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
அமெரிக்காவில் லாஸ் வேகாஸ் நகரத்தில் உள்ள உணவகமான ஹார்ட் அட்டாக் கிரில்லில் (Heart Attack Grill), ஒக்டபிள் பைபாஸ் சலஞ்ச் (Octuple Bypass challenge)எனும் உணவு உண்ணும்போட்டி நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் போட்டிக்காக வைக்கப்பட்டிருந்த பர்கர் சுமார் 20,000 கலோரி கொண்டதும் 2.94 கிலோ நிறையுடையதும் ஆகும்.
இப் பிரமாண்ட பர்கரானது பன்றி இறைச்சி 40 துண்டுகள், சீஸ் 16 துண்டுகள், வெங்காயம் ஒன்று, தக்காளி இரண்டு, மிளகாய் மற்றும் ரொட்டி உள்ளிட்ட பலவற்றை பயன்படுத்தித் தயாரிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இச் சவாலில் பங்கேற்ற அமெரிக்காவை சேர்ந்த பிரபல சாப்பாட்டு போட்டியாளரான மாட் ஸ்டோனி (Matt Stonie) என்ற 29 வயது இளைஞர் வெறும் வெறும் 4:10 நிமிடங்களில் இப்பர்கரை உண்டு அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியுள்ளார்.
இதற்கு முன்னர் மிகி சுடோ என்ற நபர் 7:42 நிமிடங்களில் இவ்வாறானதொரு பர்கரை சாப்பிட்டு பெற்ற உலக சாதனை மாட் ஸ்டோனியால் முறியடிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
8 hours ago
03 May 2025
03 May 2025