Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Ilango Bharathy / 2021 ஜூன் 09 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஒரே பிரசவத்தில் இரண்டு பெண் குழந்தைகளை ஏற்கெனவே ஈன்றெடுத்த தாயொருவர் தனது 37 வயதில், 10 குழந்தைகளை பெற்றெடுத்துள்ள சம்பவமொன்று தென்னாபிரிக்காவில் இடம்பெற்றுள்ளது.
பார்ப்பதற்கு திடகாத்திரமாக இருக்கும் அந்த தம்பதியினருக்கு, இரண்டாவது பிரசவத்தின் போது, ஒரே சூழில் கிடைத்த 10 குழந்தைகளில் ஏழு குழுந்தைகள் ஆண் குழந்தைகளாவர் ஏனைய மூவரும் பெண் குழந்தைகளாவர்.
தமாரா சித்தோல் என்ற பெண்ணின் இரண்டாவது பிரசவம் சுகப்பிரசவம் அல்ல சிசேரியன் மூலமாகவே அந்த குழந்தைகள் பிறந்துள்ளன.
தமாரா சித்தோல், நேற்றைய தினம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அத்துடன் தாயும், 10 குழந்தைகளும் நலமாகவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் இது குறித்து தமாரா கருத்துத் தெரிவிக்கையில் ”எனக்கு முதலில் ஸ்கேன் செய்தபோது 6 குழந்தைகள் இருப்பதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். பின்னர் நடத்தப்பட்ட பரிசோதனையில் 8 குழந்தைகள் இருப்பதாக கூறினார்கள்.
நான், கர்ப்பம் ஆனதில் இருந்து கடினமாக உணர்ந்தேன். ஏனென்றால் நான் பெரும்பாலும் உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன். என் குழந்தைகள் அனைவரையும் ஆரோக்கியமான நிலையில் வளர்க்க எனக்கு உதவும்படி கடவுளிடம் பிரார்த்தனை செய்து கொண்டேன்” என்றார்.
8 minute ago
20 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
20 minute ago