2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

கட்டியுடன் 6 மாதங்கள் போராடிய கிளியை காப்பாற்றிய மருத்துவர்கள்

Freelancer   / 2024 செப்டெம்பர் 19 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

மத்தியப் பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தில் 21 வயதான கிளிக்கு அறுவை சிகிச்சை மூலம் வெற்றிகரமாக கட்டி அகற்றிப்பட்டது.

மத்தியப்பிரதேசத்தின் சத்னா மாவட்டத்தைச் சேர்ந்த ஒருவரின் செல்லப்பிராணியான கிளிக்கு கழுத்தில் கட்டி இருப்பது கண்டறியப்பட்ட நிலையில், மருந்துகள் மூலம் அந்தக் கட்டியை சுகப்படுத்த முடியவில்லை.

இந்நிலையில், கால்நடை மருத்துவர்கள், அறுவை சிகிச்சை மூலமே அதற்குத் தீர்வு காணமுடியும் என வலியுறுத்தியுள்ளனர். இதற்கிடையே, கடந்த 15ஆம் திகதி இரண்டு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பின்னர் கிளியின் கழுத்தில் இருந்த கட்டி வெற்றிகரமாக அகற்றப்பட்டது.

இது தொடர்பாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர் கூறியதாவது: “இது என்னுடைய முதல் அறுவை சிகிச்சை. அந்த கிளியின் கழுத்தில் சுமார் 20 கிராம் எடை உள்ள கட்டி அகற்றப்பட்டுள்ளது. கிளியின் தொண்டைப் பகுதியில் கட்டியிருந்ததால், இந்த அறுவை சிகிச்சை சற்று கடினமாக இருந்தது” என்று அவர் தெரிவித்தார்.S

 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .