2022 ஓகஸ்ட் 15, திங்கட்கிழமை

கோல்ஃப் பந்துகளை விழுங்கியபாம்பு

Editorial   / 2022 ஓகஸ்ட் 02 , பி.ப. 06:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

 ஒரு ஜோடி கோல்ஃப் பந்துகளை சாப்பிட்டுவிட்டு வேலியில் சிக்கிய பாம்பு ஒன்று மீட்கப்பட்டது. வடக்கு கொலராடோ வனவிலங்கு மையம், அந்த பாம்பை காப்பாற்றியுள்ளது.

அமெரிக்காவில் உள்ள கொலராடோ வனவிலங்கு மையத்தில் இருந்த பாம்பு,கோழி கூட்டில் தவறுதலாக வைக்கப்பட்டிருந்த கோல்ஃப் பந்துகளை கோழி முட்டை  என்று நினைத்து  விழுங்கிவிட்டது.

அதன் பின் வேலியின் மீது ஊர்ந்து செல்லும்போது பாம்பின் உடலில் இருந்த பந்தின் அளவால் வேலியின் இடையே மாட்டிக்கொண்டது. நீண்ட நேரம் போராடிக்கொண்டிருந்ததை பார்த்து வனவிலங்கு மையத்தின் அதிகாரிகள் அதை மீட்டு காப்பாற்றியுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .