2025 டிசெம்பர் 05, வெள்ளிக்கிழமை

காதலர்கள் வழிபடும் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர்

Mayu   / 2024 பெப்ரவரி 06 , பி.ப. 02:57 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராமாயணத்தில் இராமரின் முதன்மையான பக்தராகவும், அவரின் தூதனாகவும் இருந்தவர் அனுமன். சிறு வயதில் அனுமனுக்கு குருவாக இருந்து அனைத்து கலைகளையும் கற்றுக் கொடுத்தவர், சூரிய பகவான். அவரிடம் கல்வி, இசை, வேதங்கள் என அனைத்தையும் கற்றுத் தேர்ந்த அனுமன், ‘நவவியாகரண பண்டிதன்’ என்ற பட்டமும் பெற விரும்பினார்.

ஆனால் நவவியா கரணத்தை கற்கும் நபர் குடும்பஸ்தனாக இருக்க வேண்டும் என்பது நியதி. எனவே சூரிய பகவான். தன்னுடைய மகள் சுவாச்சலாவை, தன் மாணவனான ஆஞ்சநேயருக்கு மணம் முடித்து வைத்தார் என்று சூரிய புராணம் சொல்கிறது.

இந்தியா - சென்னை செங்கல்பட்டு சாலையில், தைலாவரம் என்னும் திருத்தலத்தில், இந்த கல்யாண ஆஞ்சநேயரை தரிக்கலாம். இங்கு மூலவராக 8 அடி உயரத்தில் நின்ற கோலத்தில் ஸ்ரீஜெய வீர ஆஞ்சநேயர் அருள் பாலிக்கிறார்.

இந்த ஆலயத்தில் தனிச் சன்னிதியில் உற்சவராக சுவர்ச்சலாதேவியுடன்,  பத்ம பீடத்தில் கல்யாண ஆஞ்சநேயர் வீற்றிருப்பதைக் காணலாம்.  நான்கு திருக்கரங்களைக் கொண்ட இந்த ஆஞ்சநேயர், பெருமாளைப் போல தன் கரங்களில் சங்கு, சக்கரத்தையும் ஏந்தியிருக்கிறார்.

பலன்கள்

திருமணத்தடை இருப்பவர்கள் ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயர் தலத்துக்கு சென்று கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாகவுள்ளது.

சங்கு சக்கரம் ஏந்தி நான்கு கரங்களுடன் வீற்றிருக்கும் ஆஞ்சநேயர் சமேத சதுர்புஜ சுபமங்களவரத ஆஞ்சநேயர் என்று அழைக்கப்படுகிறார். வேறு எந்த கோவிலும் இல்லாத சிறப்பாக காதலித்தவர்களும் தங்களது துணையுடன் இத்தலத்துக்கு வந்து வேண்டுதல் வைக்கிறார்கள்.

ஆஞ்சநேயரின் சம்மதத்தைப் பெற்றால் அவரது அருளால் பெற்றோர்களின் சம்மதமும் மனமுவந்து கிடைக்கிறது. காதல் புரிந்து தம்பதியரான புதுமண தம்பதியர். திருமணத்தடை இருப்பவர்களும் இத்தலத்துக்கு வந்து ஸ்ரீ கல்யாண ஆஞ்சநேயரை வழிபட்டால் திருமணம் கைகூடும் என்கிறார்கள் பக்தர்கள்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X