2024 ஒக்டோபர் 12, சனிக்கிழமை

பேரனுடன் பட்டம் பெற்ற தாத்தா

Freelancer   / 2024 ஜூலை 01 , பி.ப. 05:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

கனடாவின் மானிடோபா பகுதியில் 19 வயதான தனது பேரனுடன் 76 வயதான தாத்தா பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். ஜூன் ஜேம்ஸ் ஈஸ்டர் என்ற 76 வயதான நபரே, 19 வயதான பெர்சின் நைட் என்ற தனது பேரனுடன் இணைந்து பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளார். இருவரும் ஒரே வகுப்பில் பட்டம் பெற்றுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் இது குறித்து ஈஸ்டர் கருத்து தெரிவிக்கையில், தனது பேரனுடன் இணைந்து பட்டம் பெற்றுக்கொள்ள கிடைத்தமை பெரும் மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவிக்கின்றார்.

மேலும், தனது பதினாறாவது வயதில் அவர் பாடசாலையை விட்டு வெளியேற நேரிட்டதாகவும், பின்னர் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வந்ததாகவும் தெரிவித்த அவர், திருமண பந்தத்தில் இணைந்து கொண்டு பிள்ளைகள் பெற்றுக் கொண்டதன் பின்னர் தமக்கு கிடைக்காத கல்வியை பெற்றுக் கொள்ளுமாறு குடும்பத்தினரை ஊக்கப்படுத்தியதாக தெரிவிக்கின்றார்.

மேலும், பட்டக் கல்வியை இடை நடுவில் கைவிடுவதற்கு பல சந்தர்ப்பங்களில் நினைத்த போதிலும் இறுதியில் வெற்றிகரமாக கற்கைநெறியை பூர்த்தி செய்ய கிடைத்ததாகவும், இந்த மகிழ்ச்சியான தருணத்தில் மறைந்த தமது மனைவியை மிகவும் நினைத்துப் பார்ப்பதாகவும் அவர் தெரிவிக்கின்றார்.

அதேசமயம், இவ்வாறு 76 வயதில் பட்டம் பெற்றுக் கொண்டமை ஏனைய பலருக்கு உந்து சக்தியாக அமையும் என அவர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.S

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .